பக்கம்:தாழம்பூ.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தாழம்பூ

சரோசா கடைசியாகப் பேசிய பியூன் அப்துல்லாவை கடைசியாகப் பார்ப்பதுபோல் கோபத்தோடு பார்த்தபோது, இன்னொரு கிரேடு டூ கிளார்க் மோகன் பொதுப்படையாக விளக்கமளித்தான் :

“இந்த பிளாஸ்க் சரியில்லாட்டா, அந்தப் பொண்ணு என்ன பண்ணும்? சர்க்கார்தலையின்னாஎல்லாகாண்ட்ராக்ட்காரன்களும் மொட்டையடிச்சிடுறான். எழுதாதபால்பாயிண்ட் இங்க் உறிஞ்கற பேப்பருமுனை இல்லாத குண்டுசி. தட்டிக்கேக்கநாதியில்ல. எனக்கு எதுக்கு வம்பு. கமிஷன் வாங்கியிருக்காங்கன்னு சொன்னாலும் அதை நிரூபிக்க முடியாதே.”

மோகன் தன்னை குறிவைப்பதைப் புரிந்துகொண்ட அக்கெளண்டன்ட் ராமசாமி அவனிடம் ஏற்பட்ட செல்லாக் கோபத்தை சரோசாவிடம் செலாவணியாக்கினார் :

“இந்தாம்மா, ஸ்டேஷனரி சாமான்களை வாங்கிக்கிட்டு வரச்சொன்னேனே... ஒன் காது செவிடா?”

“எங்க போயி வாங்கணும்னு தெரியல சார் ஒரு வாட்டி காட்டினா போதும்.”

“ஒனக்கு எல்லாமே நான் கத்துக்குடுக்கணும்னு சொல்லுவ போலிருக்கே!” -

அக்கெளண்டன்ட் ராமசாமியைப் பார்த்து, வனஜாவும், கனகாவும் செல்லமாகச் சிரித்தார்கள். தலைமை கிளார்க் மட்டும் அவர்களை லேசான கோயத்தோடு பார்த்து, பிறகு கனகாவின் முக அழகில் மயங்கியதுபோல் சிரித்தார்.

சரோசா ஆடையற்றுப்போனவள் போல் அவமானப்பட்டு நின்றாள். பல்லைக் கடித்துக் கோபத்தையும் கண்களில் தேங்கிய நீரையும் வெளிப்படுத்தாமல், அனைவருடைய மேஜைகளிலும் இருந்த எச்சில் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/242&oldid=636695" இலிருந்து மீள்விக்கப்பட்டது