பக்கம்:தாழம்பூ.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 929

ஒவ்வொரு டம்ளர் மீதும் அவள் கரம் நீண்டு அதை எடுப்பதற்கு அதிகமாகக் காலம் தாழ்த்தியது. சேரியில் பழகிய ஒவ்வொருவரும், அவள் மனதில் நிழலாடினார்கள். இப்படித்தான் ஒருதடவை ராக சரக்கப் போட்டுட்டு ‘பிரா எங்கேம்மே வாங்கினேன்னு’ கேட்டப்போ, துரையண்ணன் அவன போட்டுப் போட்டு ஒதச்சான். அப்புறம் செட்டுல இருந்தே தள்ளி வச்சான். அங்கே ஒருத்தன்தான் இப்படின்னா, இங்கே ஒட்டுமொத்தமாக அல்லாப் பசங்களும் பொம்மனாட்டிங்களும். அடக் கண்றாவியே. அடி ஆத்தே! இதுக்குப் பேருதான் கவர்ன்மென்ட் ஆபீசா?

சரோசா,யந்திரகதியில் இயங்கினாள். அப்துல்லா நாற்காலி யைதுடைத்துவிட்டாள்.அவனோடுபோய்டைப்ரைட்டரை சுமந்து வந்தாள். மீண்டும் வெளியே உள்ள ஒட்டலுக்கப் போய் வந்தாள். எச்சில் கிளாஸ்களை மூணாவது தடவையாகக் கழுவி விட்டாள். இதற்குள் கிளிக்கூண்டு மாதிரி இருந்த பிளைவுட் அறைக்குள் இருந்து ஒரு காலிங்பெல் சத்தம். சரோசா உள்ளே ஒடிப்போனாள். அங்கேமெத்தை போட்ட நாற்காலியில் உடம்புமுழுவதையும் பரப்பி வைத்திருந்த அசிஸ்டென்ட்டைரக்டர் அருணாசலம்,அவளிடம் ஒரு பில்லையும், இருபது ரூபாய் நோட்டையும் கொடுத்தபடியே உத்தரவிட்டார்:

“ஒரு பேண்டையும், சர்ட்டையும் இந்த லாண்டரியில போட்டிருக்கேன். அப்புறம் ஒனக்கு பாஸ் தந்தார்களா?”

“தருவாங்க சார்” “கேட்டதுக்கு பதில் சொல்; தந்தாங்களா, தரலியா?”

“தர்ல; தருவாங்க!” “இந்தாப்பா கந்தரம் இந்தப் பொண்ணுக்கு பாஸ்போட்டுக் குடுன்னு சொன்னேனே. ஏன் போடலே? ஒன்னத்தாம்பா கந்தரம். மூணுதடவ கேக்கிறேன்ல, ஒரு தடவையாவது பதில் சொல்லேன்.”

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/243&oldid=636696" இலிருந்து மீள்விக்கப்பட்டது