பக்கம்:தாழம்பூ.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தாழம்பூ

“நேற்று போட்டுக் கொடுக்கிறதா இருந்தேன். அதுக்குள்ள ஒங்க எல்.ஐ.சி பணத்த கட்டப் போயிட்டேனா, இன்னிக்கி காலையில போடலாமுன்னு நினைச்சேன். அதுக்குள்ள ஒங்க டெலிபோன் பில்ல கட்டப் போயிட்டேனா.”

சரோசா லாண்டரி பில்லோடு வெளியே வந்தபோது, பி.ஏ.’ கந்தரம் எரிந்து விழுந்தான் :

“ஒன் மனகல என்னம்மா நினைப்பு? வேலையில சேர்ந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள ஒன் புத்திய காட்டிட்டியே ஆபீசருகிட்டபோய் ஏன் கம்ப்ளைண்ட் செய்யுறே?

“நான் வேணும்னு சத்தியமா.” “இனிமே ஒனக்குப் பாஸே தரமாட்டேன். வேணுமுன்னா நான் சொன்னேன்னு உள்ளே கிடக்கறதுகிட்ட சொல்லு. ஒன் மினுக்கத்த பார்த்தால் நீயே ஒரு பாஸ் மாதிரிதான்.”

எல்லோரும் அவளைப் பார்த்துச் சிரித்தார்கள். சரோசா தனக்குத்தானே புரியாத புதிராய் தவித்தாள். அந்தச் சமயம் பார்த்து, உயரம், கனம், வயது ஆகிய முப்பரிமாணங்களிலும் நடுத்தரமான ஒருவர் உள்ளே வந்தார். அனைவரும் அவருக்கு சல்யூட் அடித்தார்கள். அவர், அவற்றை தலையாட்டி அங்கீகரித்தபடியே பிளைவுட் அறையின் புஷ் கதவைத் திறந்தார். அது, அவரது கையை இடுக்குப்பிடி போட்டுக்கொண்டு தலையில் ஒரு போடு போட்டது. அவர் தலையை தடவியபடியே புதுப்பெண் போல் நின்ற சரோசாவை கட்டிக்காட்டி “இது யாரு” என்றார்.

“புது கேஷ்வல் சார்.”

‘இந்தாம்மா, கேஷ்வலு. நான் உள்ளே இருக்கிறவர்

மாதிரியே ஒரு ஆபீசரு. என்னப் பார்த்துட்டு அந்தக் கதவ திறந்து வச்சிக்கிட்டு நிக்கணும்னு ஒனக்கு ஏன் தோனல? நானே கதவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/244&oldid=636697" இலிருந்து மீள்விக்கப்பட்டது