பக்கம்:தாழம்பூ.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தாழம்பூ

புதைந்தாள். அவனிடம் ருக்கு வீட்டில் நடந்த அனைத்தையும் காரண காரியங்களோடு சொல்ல வேண்டும் என்றுதான் அவள் துடித்தாள். அவனோ, அவளுடைய தோஸ்தாக நடந்துகொள்ளாமல், பாக்கியம்மாளின் மகனாகவே நடந்து கொள்கிறான். இல்லையானால், படிகளில் அப்படி நடந்து போயிருக்க மாட்டான். சரோசா வெளியே போய், லாண்டளித் துணிகளை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது செக்ஷனுக்குள் வந்தாள். அப்போது தலைமை கிளார்க் எட்வர்ட் முன்னால் நாற்பது வயதுபெண் ஒருத்தி கண்ணிரும், கம்பலையுமாய் அழுது கொண்டிருந்தாள். பரட்டைத் தலை, பழுப்பேறிய முகம், காய்ப்புக்கள் கொண்ட கைகள், திக்கற்ற பார்வை, திக்குமுக்காடும் குரல். எட்வர்ட் அவளை விரட்டினார்:

“இங்க வந்து ஏம்மா ஒப்பாரி போடுறே? ஒன்கிட்ட எத்தனை தடவ சொல்லுறது? ஒன் புருஷன் செத்தா நான் என்ன செய்ய முடியும்? தாசில்தாரோட வாரிசு சர்ட்டிபிகேட்ட திருத்தாமல், பென்ஷனையோ, பிராவிடன்ட் பணத்தையோ தரமுடியாது. என்கிட்ட அழுகிறத, தாசில்தார் கிட்ட போய் அழு.”

“தாசில்தார் கிட்ட போனேன் சார். பல தடவை காத்திருந்து ஒருதடவை பார்த்தேன். என்னோட மாமியார் அவரோட புருஷன் பென்ஷன வாங்கிக்கிட்டிருக்கார். அதோட அவருக்கு என் புருஷன் மாதிரி ஆறு பேர் இருக்காங்க. அதனால அவரு வாரிசுகள்ல ஒருத்தரா ஆகுமுடியாதுன்னு படிச்சுப்படிச்க சொன்னேன். ஆனால், அந்த ஆளு கொடுத்தது கொடுத்ததுதான், செய்யுறத செய்துக்கோன்னு கத்துறாரு”

“அதுக்கு ஏம்மா, என் பிராணன வாங்குறே? வாரிசு சர்ட்டிபிகேட்டுல தாசில்தார் வில்லங்கம் செய்தால், நான் என்ன செய்ய முடியும்? அந்த சர்ட்டிபிகேட்ட திருத்தாத வரைக்கும் நாங்க ஒனக்கு ஒரு பைசா தர முடியாது"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/246&oldid=636699" இலிருந்து மீள்விக்கப்பட்டது