பக்கம்:தாழம்பூ.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 233

“அப்போ, பியூனா வேல பார்த்த என் புருஷன் செத்து இந்த ஒன்பது மாசமா வயது வந்த மகளோட, படிக்கிற பையனோட பட்டினி கிடக்குறேனே, அது மாதிரி கிடக்கணும்னு சொல்றீங்களா?”

தலைமை கிளார்க் எட்வர்ட், அவளுக்குப்பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்த்தார். அந்தப் பாவிப் பெண்ணும், ஆறுதலுக்காக அங்குள்ள அத்தனை முகங்களையும் பார்த்தாள். ஒன்றுகூட ஒரு அனுதாபப் பார்வையை வீசவில்லை. இவ்வளவுக்கும் அவள் கணவன் அந்த செக்ஷனிலேயே கொத்தடிமை போல் வேலை பார்த்தவன். அனுதாபமாகப் பார்த்த சரோசாவிடம் ஒரு தோழியைக் கண்டுவிட்ட தோழமையில், அந்தப்பெண் “நீங்களே சொல்லுங்கம்மா, புருஷன் இருக்கப்பவே, அரப்பட்டினி. அவரும் செத்து, அதோட அவரு சம்பளமும் செத்துப் போனால் எப்படிம்மா பொழப்ப ஒட்டுறது?” என்றாள். இதற்குள் அக்கெளண்டன்ட் ராமசாமி சரோசா மீது எரிந்துவிழுந்தார்.

“ஏய் சரோசா, பெரிய ஆபீசருமாதிரிகேட்டுகிட்டா நிக்கே? ஒன் வேலையை பாறேன். சரியான கழுத்தறுப்பு. இந்தாம்மா! ஒன் புருஷனோட வாரிக சர்ட்டிபிகேட்டை தாசில்தார் திருத்தணும். இல்லாட்டி நீ தலைகீழா நின்னாலும் பணிக்கொடை பணமோ, சேமநிதியோ, பென்ஷனோ வராது. பேசாமப் போ. தலைக்கு மேல வேலையிருக்கு”

அந்தப்பெண் தலையில் கைவைத்தபடியே வெளியேறினாள். வாசலைத் தாண்டியபோது, ஒரு விம்மல், வெடிச்சத்தம் போலக் கேட்டது. அவளை விக்கித்துப் பார்த்து நின்ற சரோசாவும், நிலைகுலைந்து போனாள்.

அன்று மாலைப் பொழுது முழுவதும் சரோசா மனதில் அந்த அப்பாவி விதவைப் பெண்ணே குடியிருந்தாள். இதற்குள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/247&oldid=636700" இலிருந்து மீள்விக்கப்பட்டது