பக்கம்:தாழம்பூ.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234. தாழம்பூ

அனைவரும் போகத் துவங்கினார்கள். மாடிப்படிகளில் சந்தோஷமான பேச்சும், சரளமான காலடிச்சத்தங்களும் கேட்டன. அந்த செக்ஷனில் இருந்த பெண் கிளார்க்குகளும், மோகனும் போய்விட்டார்கள். ஆனால், தலைமை கிளார்க் எட்வர்ட், கணக்காளர் ராமசாமி உட்கார்ந்திருந்தார்கள். வேறு செக்ஷனிலி ருந்து இரண்டு மூன்றுபேர் உள்ளே வந்தார்கள். வெளியே போகப்போன சரோசாவை, எட்வர்ட் அங்கே நிற்கும்படி சைகை செய்தார். இதற்குள் அப்துல்லா, கதவை மூடினாள். ஜன்னல்களை சாத்தினான். போதாக்குறைக்கு ஸ்கிரீன் துணிகளை இழுத்துவிட்டான். எட்வர்ட், ஒரு தாளில் வரிசை வரிசையாக எழுதி, சரோசாவிடம் ரூபாய் நோட்டுகளையும் நீட்டியபடியே உத்தரவிட்டார்.

“இந்தாம்மா, ஒரு புல் பாட்டில் பிராந்தி, நாலு பீர், கொஞ்சம் நொறுக்குத் தீனி. எட்டு பாய்ல்டு முட்டை. குயிக்கா வாங்கிக்கிட்டு வா.”

சரோசா திகைத்துப் போனாள். ஒருவேளை, தான் ஒருமாதத்திற்கு முன்புவரை சரக்கு வாங்கியது அவர்களுக்குத் தெரியுமோ என்று கூட நினைத்தாள். இங்கேயுமா சரக்கு? அடக்கண்றாவியே! ஒரு நிமிடம் மலைத்து நின்றவள், பிறகு மலைபோன்ற உறுதியுடன் அழுத்தம் திருத்தமாய் சொன்னாள்:

“இந்த வேலைக்கி வேற ஆளப் பாருங்கோ சாரே...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/248&oldid=636701" இலிருந்து மீள்விக்கப்பட்டது