பக்கம்:தாழம்பூ.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஸ்பெக்டர் கோபதாபமாக எழுந்தார். அருகே உட்கார்ந்திருந்த ‘எல் அன்டு ஒ இன்ஸ்பெக்டரைப் பார்த்து அவர்தான் தனது நிலைமைக்குக் காரணம் என்பது போல் தன்னை அறியாமலே கத்தினார் :

“என்னப்பா இது, பொல்லாத செக்யூரிட்டி டியூட்டி இந்த வாரத்திலேயே இது மூன்றாவது தடவை. குடிக்கக் கூட தண்ணிர் கிடைக்காமல் மணிக்கணக்கில் திண்டாடணும். போன சமயம் இப்படித்தான்:எவனோ தலகாஞ்சவன்னு ஒருத்தனத்திட்டிட்டீங்க. அவ்வளவுதான்,அவன் குதியோகுதின்னுகுதிச்சான்.பிரஸ்மேனாம். அப்பப் பாத்து டெபுட்டி கமிஷனர் வந்தார். அடாபடியாப் பேகற அவனைத்திட்டப்போறார்னுநெனைச்சேன்.அவர் என்னடான்னா ‘தொப்பியை கழத்தனுமாயா'ன்னு என்னைத் திட்டிக்கிட்டு அந்த ஜிப்பாப்போட்டபிரஸ்காரன்தோளிலேகையைப்போட்டுக்கிட்டுப் போறார்.வசவுவாங்குறதுக்குப்பெயரே செக்யூரிட்டிடியூட்டின்னு ஆகிப்போச்சு”

இந்தச் சமயத்தில், ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சபாரி உடைக்காரர் ஒருவர், ஐம்பது வயதுப் பெண்ணோடு உள்ளே வந்தார். அவர் கெஞ்சிய கெஞ்சல், அந்த உடைக்குச் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. முகமெல்லாம் வியர்த்து தரையில் சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த அம்மா கணவனைப் பிடித்துக் கொண்டே ஏங்கி ஏங்கி அழுதாள்; அந்த மனிதர் அழுகைக் குரலில் புலம்பினார் ;

‘இன்ஸ்பெக்டர் சார்! நீங்கதான் சார் எங்களைக் காப்பாற்றணும். நீங்கதான் எங்களுக்கு அடைக்கலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/249&oldid=636702" இலிருந்து மீள்விக்கப்பட்டது