பக்கம்:தாழம்பூ.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 237

என்று தெரியும். சரோசாவுக்கு அண்ணாத்தையான சாராய சக்ரவர்த்தி, அந்த பிளாட்டுக்கு கிரஹப்பிரவேசத்திற்கு இவரே போயிருக்கிறார். இப்போது பட்டும் படாமலும் பேசினார்:

“எதுக்கும் நாளைக்கு வாங்க. நான் கவர்மென்ட் லாயரை கன்செல்ட் பண்ணணும். இது சிவில் விவகாரம். கிரிமினல் விவகாரம் இல்ல. போலீசுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினை. தாசில்தார் தீர்க்க வேண்டிய விவகாரம்.”

“தாசில்தாருக்கிட்டே போனேன் சார். அவரு போலீஸ் விவகாரம் என்கிறார். சார், எங்கள மாதிரி வெளி நகரத்தில் இருந்து தமிழ் மண்ணையே நேசிச்ச ஆட்களுக்கு நீங்கதான் சார் ஆதரவு கொடுக்கணும்; நீங்கதான் சார் காப்பாற்றணும்.”

“நீங்க சொல்றது சரிதான். அதேசமயம் மல்டிப் பிளாட்” கட்டுறவர், எம்எம் டியே அப்ரூவல் வாங்கித்தான் கட்டுவார். அந்த அப்ரூவல், பட்டா இல்லாமல் கிடைக்காது. அதனால்தான் தாசில்தாருக்கிட்டே போகச் சொல்லுறேன்.”

“இதோ இருக்கு சார் என் பட்டா.” ‘இது பட்டாவா, பட்டமான்னு தாசில்தார் தான் தீர்மானிக்கணும். அவர் சரிப்படாட்டால், கோர்ட்டுக்குப் போங்க”

“அப்போ போலீஸ் எதுக்கு சார்? “என்னையா நீ பெரிய மனிதன்னு மரியாதை கொடுத்தால் சின்னத்தனமா நடந்துக்கிடுறியே. நிலத்தை வாங்கும் போது போலீஸ்ல கேட்டா வாங்குன? முதலில் இடத்தைக் காலி பண்ணுய்யா.”

இந்த மாதிரி வார்த்தைகளைக் கேட்டறியாத அந்த ஓய்வு பெற்ற மத்திய அதிகாரி, அப்படியே அசைவற்று நின்றார். இன்ஸ்பெக்டர் அடித்தாலும் அடித்து விடுவாரோ என்று அந்த அம்மா பயந்து போனாள். கணவனை இழுத்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/251&oldid=636705" இலிருந்து மீள்விக்கப்பட்டது