பக்கம்:தாழம்பூ.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 தாழம்பூ

மைக்கில் பேசி முடித்த இன்ஸ்பெக்டர், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மீது இருந்த கோபத்தை மறந்து, தாபத்தோடு பேசினார் :

“அந்த சாராயக்காரி சரோசாவுக்கு திமிரப் பாரு. யாரோ ரவுடிங்க, அவளை ஏதோ ஒரு நைட்டுல கொலை செய்யப் போனாங்களாம். லோக்கல் போலீஸ்ல நம்பிக்கை இல்லன்னு, கமிஷனரே விசாரிக்கணும்னு மனுக் கொடுத்திருக்கிறாளாம். டெப்டி கமிஷனர் கத்துறார். ‘எப்படிய்யா அவளை கமிஷனர் லெவலுக்கு விட்டு வைக்கலாமு ன்னு சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சொல்லுறார். இவளை அப்பவே விட்டது தப்பாப் போச்சு.”

“லோக்கல் போலீஸ், கமிஷனர் ஆபீஸ், கிரைம் பிராஞ்ச், இந்த மாதிரி வார்த்தைகள் சாதாரணமானவங்களுக்குத் தெரியாது. இவளுக்குப் பின்னாலே எவனோ ஒரு போலீஸ்காரன் இருக்கிறான்.”

“எவனோ என்ன எவன்; இந்த திருமலையப்பனாத்தான் இருக்கும்.”

“பாத்திடலாம். இந்த சரோசா எங்க போயிடப் போறாள்?”

கிரைம் இன்ஸ்பெக்டர், சரோசா எதிரே நிற்பதுபோல் அனுமானித்துக்கொண்டு இரு இரு’ என்பது மாதிரி தலையை மேலும் கீழுமாய் ஆட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/254&oldid=636708" இலிருந்து மீள்விக்கப்பட்டது