பக்கம்:தாழம்பூ.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தாழம்பூ

உடனே ஆறுமுகப்பயல் “ஒரு கமர்கட்” என்றான். கோவிந்து ஒரு குவார்ட்டர்’ என்று சொல்லப்போன வார்த்தையை தொண்டைக்குள்ளேயே குவாட்டராக்கிக் கொண்டான். ருக்குதான் “அது இதுன்னு வாங்கிடாதே மவளே, புது குடிசைக்கு 200 ரூபா கொடுக்கணும். இளங்கோ சாருக்கு கடன் திருப்பிக் கொடுக்கணும். நாஷ்டா ஆயாவுக்குத் தரணும்” என்று அறிவுறுத்தினாள்.

சரோசா மனதிற்குள் பேசிக் கொண்டாள்.

அவள் கிடக்காள். ருக்குவுக்கு பாவாடை தாவணி மாதிரி ஒரு சேல வாங்கிக் கொடுக்கணும். எதுக்குக் கொடுத்தாலும் கொடுக்காட்டியும் நாளைக்கே புது குடிசைக்கி போயிட லும். ருக்குவோட ஆட்டுக்காரி தத்தேரி முண்ட, ஆளு அதிகமா ஆயிட்டுதுன்னு கரண்ட கட்பண்ணுறாள். குட்சய காலி பண்ணச் சொல்லி ருக்குவ நச்சரிக்கிறாள். ஆமாம், எம்மாம் சம்பளம் தேறும்? ஒரு நாளைக்கி 34 ரூபா நாற்பது பைசா. லீவு நாளு இல்லாம 24 நாளு வேல பார்த்திருக்கேன். நாற்பது பைசா. கஸ்மாலம் விட்டுத்தள்ளு. இருபத்தி நாலு நாளுல முப்பத்திநாலு ரூபா எம்மாம் தொகை? கோவிந்துகிட்ட கணக்குக் கேட்டா ஒரு புல் பாட்டிலே கேப்பான். அடடே, இந்தக் கணக்கு கூட எனக்குத் தெரியலியே.

சரோசா, முகத்தை துடைத்துக் கொண்டே, மோகன் அருகே போனாள். அவன் கேள்வி பாவனையோடு முகம் காட்டியபோது கேட்டாள் :

“சாரே, சாரே! இருபத்தி நாலு. முப்பத்தி நாலு எம்மாம் சாரே? அதாம சாரே, ஒரு நாளிக்கி முப்பத்தி நாலு ரூபா. அப்போ, இருபத்திநாலு நாளிக்கி? பிளிஸ் சாரே.”

மோகன் மனதுக்குள் முனங்கினான். விரலை மடக்கினான். முடியாமல் போகவே கால்குலேட்டரை எடுத்துக் கணக்குப் போட்டான். “816 ரூபாய். என்ன விஷயம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/256&oldid=636710" இலிருந்து மீள்விக்கப்பட்டது