பக்கம்:தாழம்பூ.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 24.3

“என்னோட சம்பளம் சாரே! இன்னிக்கி, நம்ம செக்ஷன்ல அல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கப் போறேன். ஏதோ ஒங்க புண்ணியத்துல இப்பதான் லைப்புலயே முதல் தடவையா எட்டு நூறு ரூபா நோட்டுங்கள சொந்தமா பாக்கப் போறேன்.”

தலைமை கிளார்க் எட்வர்ட் பேனாவை உதறி உதறி வெள்ளை கவரை கறுப்பாக்கியபோது, சரோசா ஒடிப்போய் அவரது பேனாவைப் பறித்தாள். அந்த ஒல்லிப் போனவில் தடித்த பாட்டிலை எடுத்து இங்க் ஊற்றினாள். டைப்ரைட்டரில் இருந்த துாசியை வனஜா ஊதிவிடுவதைப் பார்த்து விட்டு, அவள் அருகே ஒடிப்போய், டஸ்டர் துணியை எடுத்து அதைத் துடைத்து விட்டாள். வாய்க்கு வெளியே தெரிந்த பற்கள் உள்ளே போகவில்லை. சம்பளம் வாங்கினவுடனேயே இளங்கோ சாரப் பார்த்து அது பேகதோ இல்லியோ, அது காலுவ பணத்த வச்சி எடுக்கணும்:

‘ஆனானப்பட்ட அநியாயக்கார இன்ஸ்பெக்டரு கூட ஒப்புக்காவது ஒரு விசாரணை நடத்துறார். ஆனால் இந்த இளங்கோ சாரு, ஒரு சின்ன விசாரணை கூட நடத்திலேயே. பாவம் அவரு. பாமா காயப்போட்டதுல ஒலர்ந்து போயிட்டார். அடடே, காதலுக்கு இம்மாம் சக்தியா? பாவம் அவருக்கு கன்னங்கூட குழிவிழுந்துட்டு, பாமா, அவர திரும்பிக்கூடப் பார்க்கறது இல்லன்னு ருக்கு வேற சொல்லுறாள். எல்லாம் என்னால. அப்படி நான் சொல்லாட்டி ருக்கு கோவிந்துக்கு, பொண்டாட்டியா தெரிந்திருக்காது. எதுக்கும் பாமாவப் பார்த்து விசயத்த எடுத்துச் சொல்லணும். தேவைப்பட்டா அவள் கன்னத்துல இரண்டு போடுபோட்டு, வலுக்கட்டாயமா கையப்பிடிச்சி இழுத்து, இளங்கோ சாரு முன்னால நிறுத்தணும். பாமா. கண்ணால பார்த்ததும் பொய், காதால கேட்டதும் பொய்யும்மா. கண்ணு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/257&oldid=636711" இலிருந்து மீள்விக்கப்பட்டது