பக்கம்:தாழம்பூ.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாழம்பூ

வலது கை கோணிப் பையை இடது கைக்கு மாற்றிக் கொண்டு, யோசித்தாள். அந்தப் பக்கம் ஜம்ப் பண்ணமுடியாது. போதாக் குறைக்கு நடு வீட்டுக்கு முன்னால் ஸ்டூல் போட்டு ஒரு கூர்க்கா உட்கார்ந்திருந்தான். அவள் திரும்பி நடந்தாள்.

இளங்கோவை நோக்கி, எதுவுமே நடக்காதது போல் ஒரங்கட்டி நடந்தாள். கீழே கிடந்த ஒரு பேட்டரி செல்லை பொறுக்கி கோணிக்குள் போட்டுக் கொண்டு, ‘பாவலா செய்தபடி அவனைப் பார்க்காதது போல் பார்த்து, நடக்காதது போல் நடந்தாள். அவள், அந்த குறுக்குத் தெருவில் தெற்குப் பக்கமாகத் திரும்பப் போனபோது, அவன், அவள் முன்னால் போய் இரண்டு கைகளையும் சிலந்திக்கால்கள் மாதிரி குவித்துக் கொண்டு நின்றான். அவள் பிறருக்குக் கேட்காத - அதேசமயம் அவனுக்குக் கேட்கும் - கிசுகிசுப்புக் குரலில் -

“வழிய விடு சாரே.”

“எச்சிக்கலன்னு சொல்லிட்டு இப்ப சாரா போடுறே. ஒன்ன விடமாட்டேன்.”

“என்ன சாரே. வம்பு பண்றே. ஒன்ன எதுக்கு நான் அப்படி சொல்லணும்? நீ...அடையாளம் தெரியாம பேசறேன்னு நினைக்கேன். ஒன்னை எதுக்கு நான் திட்டனும்? நீ என் மாமனா, மச்சானா, எதிரியா?”

“யாருமில்ல! நீ அடிச்சுப்போட்டுட்டு வந்திருக்கியே, அவங்களோட மகன். ஒன்னை போலீஸ்ல ஒப்படைக்கப்போற சமூகத் தொண்டன்.”

சரோசா, அவனை நேருக்கு நேராய் பார்த்தாள். தோற்றத்தில் வஸ்தாதுதான். ஆனால், தோரணையைப் பார்த்தால் ஒரு குயந்தே. டபாச்கடலாம். அவள் இப்போது நாலு பேருக்குக் கேட்கும்படி சத்தம் போட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/26&oldid=636714" இலிருந்து மீள்விக்கப்பட்டது