பக்கம்:தாழம்பூ.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தாழம்பூ

“ஆரும் போன் போடலம்மா” என்று சொல்லிவிட்டு, திரும்பி நடந்தாள். ஆமாம், எங்க சம்பளம் கொடுக்குறாங்கோ? அதோ வாறாளே முனியம்மா, நல்லவ. கூப்டலாம்.

சரோசா மீண்டும் உள்ளே வந்தாள். ஒரு வார்த்தை சொல்லாமப் போறது எவ்வளவு பெரிய தப்பு. ஆனாலும் எனக்கு இப்பிடி தெனாவுட்டு ஆகாதுப்பா. அவள் தலைமை கிளார்க்கின் முன்னால் நின்று தலையை சொறிந்தபடியே சொன்னாள் : “சம்பளம் வாங்கிட்டு வாறேன் சாரே. கொஞ்சம் லேட்டானாலும் போகாதீங்கோ. அல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கப்போறேன். கேண்டின்ல இனிப்புக்கும் மிச்சருக்கும் ஆர்டர் பண்ணிட்டேன்.”

தலைமை கிளார்க் எட்வர்ட், அவளை ஏறிட்டுப் பார்த்து, பிறகு ஏற்றிய தலையை இறக்கினார். எதுவும் பேசவில்லை. அதையே மவுன அனுமதியாக எடுத்துக்கொண்ட சரோசா, உடம்பு குலுங்க ஓடினாள். இடையிலே படியிறங்கி வந்த முனியம்மாவை வழிமறித்தாள். அவள் இவளைப் பார்த்து பயந்ததுபோல் கையில் இருந்த கவரை ஜாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டாள். இவளை விட ஐந்து வயது பெரியவள். இன்னும் கேஷ்வல்தான். ஆனால் அடுத்தமாதம் பெர்மனன்ட் ஆகிவிடுவாளாம். அடேங்கப்பா. நானும் இரண்டு வருஷம் பெர்மனன்ட் ஆகாம பேஜாருல இருக்கணும் போலிருக்கே.

“ஏய், முனிம்மாக்கா! எங்கே சம்பளம் கொடுக்காங்கோ? எனிக்கி 800 ரூபாய்க்கி மேல வரப்போகுது. நீயும் என்னோட வா. நான் பணம் கொடுக்குற இடத்த தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னால போயிடப் போறாங்க. அப்பாடி, எட்டு நூறு ரூபா நோட்ட கையில பிடிக்கப்போறதநினைச்சி எம்மாம் சந்தோஷமா இருக்கு தெரியுமா முனிக்கா.”

“முதல்ல ஒன்னோட 800 கிடக்கட்டும், மொதல்ல இருபது பைசா வச்சிருக்கியா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/260&oldid=636715" இலிருந்து மீள்விக்கப்பட்டது