பக்கம்:தாழம்பூ.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 247

‘எதுக்காம்?”

‘இஸ்டாம்புக்கு. இருபது பைசா கொடுக்காட்டி அந்தக் கொள்ளிக்கட்ட முந்திரி கண்ணன் சம்பளம் தரமாட்டான்! அப்புறம் எனிக்கிக் கொஞ்சம் தாயேன். அடுத்த வாரம் கொடுத்துடறேன்.”

சரோசா, அவளைக் கண்டிப்புடன் பார்த்தாள். அப்படிப் ப்ார்க்கப் பார்க்க அவளது தொய்வு விழுந்த முகமும், நெஞ்செலும்புக் கூடம் அவளை வருத்தின. பாவம் பிள்ளைகுட்டிக்காரி. ஆனாலும் தனக்குப் போகத்தான் தானம். ‘'எக்கா, ஒரு நூறு ரூபா வேணும்னா தாறேன். ஆனால் அடுத்த வாரம் கொடுத்துடனும்.”

முனியம்மா, சரோசாவின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். இப்போது அவளே இவளை இழுத்துக் கொண்டு படியேறினாள். முதல் மாடியில் மூச்சிரைக்க நின்றார்கள். பிறகு மேல்மாடிக்கு ஏறி இரண்டாவது மாடிக்கு வந்தார்கள். ஒரு மூலை அறை, பாதிச்கவருக்கு மேல் பாங்கில் இருப்பது மாதிரி வலை பின்னிய கதவு. அரைவட்ட வழி. உள்ளே மேஜை டிராவுக்குள் கத்தை கத்தையாய் நோட்டுக்கள். மேஜைமேல் ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட ஒரு பெரிய ரிஜிஸ்டர். காஷியர், முனியம்மா சொன்னது மாதிரியே ஒரு முந்திரிக் கண்ணன். கண்ணில் கருவிழியையும் வெண்மைப் பகுதியையும் கண்டுபிடிக்க முடியாத கண்ணன். ஆனால், படுகட்டி. ஒருத்தருக்கு ஒரு கத்தை நோட்டை எடுத்து முதலாவது நோட்டின் நம்பரையும், இறுதி நோட்டின் நம்பரையும் பார்த்துவிட்டுக் கொடுத்தான். அவரையே, கண் வாங்காமல் பார்த்தான். அந்த ஆசாமி அதை பைக்குள் வைக்கப்போன போது “எண்ணிப் பாருங்கள்” என்றான். அவர் “சரியாய்த்தான் இருக்கும்” என்று சொன்னபோது, அந்தக்கத்தை நோட்டை அவரிடமிருந்து கைப்பற்றி அவனே எண்ணிக் காட்டினான். இந்தச் சமயத்தில் வளையல் போட்ட கரம் ஒன்று, அந்தத் திரைவழிக்கு அடிக்கோலாய் ஆனபோது, அவன் எரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/261&oldid=636716" இலிருந்து மீள்விக்கப்பட்டது