பக்கம்:தாழம்பூ.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தாழம்பூ

‘நரசிம்மாவதாரம் மாதிரி வெளியேயும் நிற்காமல், உள்ளேயும் போகாமல் வாசலுக்கு வாய் உள்ள கதவு போல் நின்று கொண்டிருந்தார். அவருக்குப் பயந்து பியூன் அப்துல்லா தனது பெரிய மேஜைக்குள் நெருப்புக் கோழி மாதிரி தலையை மட்டும் மறைத்துக் கொண்டான்.

சரோசா, டெலிபோனில் பேசிக் கொண்டிருந்த எட்வர்ட் முன்னால் போய் நின்று அவர்முகத்தை நோகவைத்தபடிகத்தினாள்: “எனக்கு ஏம்பா சம்பளம் போடலை? ஒன்னத்தாம்பா, செக்ஷன் வஸ்தாது எனக்கு ஏன் பில் போடல?”

தொலைபேசிக் கருவிக்குள் கிட்டத்தட்ட வாயைச் செருகிக் கொண்டு பேசிய எட்வர்ட்டுக்கு, சரோசா கத்துவது கேட்டதே தவிர அதன் கருத்து கேட்கவில்லை. அவளைச் சட்டை செய்யாமல் தொடர்ந்து பேசினார். உடனே சரோசா அவர்பேசிய டெலிபோன் குமிழை பிடித்திழுத்து,"ஏம்பா ஒன்னத்தான்! என்னோட சம்பளம் என்னாச்சு?” என்று கேட்டபோது எதிர்முனையில் இருந்தவர் “ஹலோ அங்கே என்னப்பா நடக்குது?’ என்று கேட்பது ஒலித்தது. சரோசா, அந்தக் குமிழை பலவந்தமாகப் பறித்து கீழே வைத்தாள். எல்லோரும் அந்தப் பூனைப் புலியை ஆச்சரியமாகவும் அதிர்ந்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, பின்னர் அவள் பக்கமாக வந்தார்கள். அப்துல்லாவுக்கு மட்டும் சந்தோஷம். இந்த ரகளையில் பெரிதாக்கும் வகையில் கத்தினான் : “இந்தாம்மா சாரோ! இது ஆபீஸ், நீ இருக்கிற சேரி இல்ல. எது பேசினாலும் முறையாப் பேக. இல்லாட்டி..”

“இல்லாட்டி என்னடா செய்வே பிராண்டிப் பையா?”

அப்துல்லா, கடந்த கால ஏவலை மனதில் நினைத்துக் கொண்டு அதிர்ந்து போய் நின்றபோது, துணி வியாபாரி, அதுதான் சாக்கு என்று அவன் பக்கமாய் நகர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/264&oldid=636719" இலிருந்து மீள்விக்கப்பட்டது