பக்கம்:தாழம்பூ.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தாழம்பூ

‘ஏய்யா பெரிய மனுஷங்காளா.. மனுஷிகளா! நான் சம்பளம் வாங்கப் போறேன்னு, ஒங்க கிட்ட சொன்னேன்னே, அப்போகாட்டி பில்லு போடலைன்னு சொன்னா ஒங்க வாயி அயிகிப் போயிடுமா? எந்த நாறிப்படையாவது வாய் தொறந்தீங்களாய்யா? உங்களுக்கு பிராண்டி வாங்கிக் கொடுக்காட்டி என்னைப் பிராண்டுவீங்க. அப்படித்தானே? யாரும் வெளியே போகக் கூடாது. எனக்குப் பதில் சொல்லாம யாரும் அப்பால இப்பால போகக் கூடாது; இல்லாட்டி கொலை நடக்கும்.”

சரோசா, அந்த செக்ஷனின் அறைக் கதவைக் காலால் உதைத்துச் சாத்தினாள். அவளை எதிர்க்கும் திராணி கொண்ட அப்துல்லாவோ, துணிக்காரரிடம் ஒரு ஒரமாக டூயட் பேசிக் கொண்டிருந்தான். அனைவரும், அந்த புதிய சரோசாவைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். எதற்கும் கவலைப்படாதவன் போல், நடப்பதை ரசித்துக் கொண்டிருந்த கிளார்க் மோகன் மீது ஆபத்துக்குத் தோஷமில்லை என்பதுபோல், கனகா ஒட்டிக் கொண்டாள். வனஜாவோ, பி.ஏ. சுந்தரத்தின் பின்னால் போய் நின்று கொண்டாள். தலைமை கிளார்க்கின் பாண்ட், இடுப்புக்குக் கீழே நனைந்திருந்தது.வெளியே நடக்கும் விவகாரங்கள் நன்றாகப் புரிந்தாலும், அவை தானாகச் சரியாகிவிடும் என்ற நப்பாசையுடன் இருந்த அளவிஸ்டெண்ட் டைரக்டர் அருணாசலம் இப்போது மெல்ல ஆமை மாதிரி கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டினார். பிறகு, உடம்பு முழுவதையும் வெளிப்படுத்திக் கொண்டு அரண்டு போனதைக் காட்டிக்காமலே அதட்டினார் :

“என்ன சத்தம் இங்கே? என்ன ரகளை? சரோசா, முதல்ல கதவைத் திற.”

“உன்னோட சூட்கேஸை வாங்கிட்டு உனக்கி நல்லாத்தான் கதவைத்தெறந்துவிட்டேன். ஆனா,இன்னிக்கு இப்படி நானுதிறந்த கதவுக்கு பைசல் தெரியாமல் போனதால அதை மூடிட்டேன். எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/266&oldid=636721" இலிருந்து மீள்விக்கப்பட்டது