பக்கம்:தாழம்பூ.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 253

ஏன் சார் சம்பளம் கொடுக்கலை? அல்லா கேகவலுங்களும் வாங்கறப்போ எனிக்கு ஏன் தரலை?”

டெப்டி டைரக்டர் எதுவும் தெரியாதவர்போல வாயும் வயிறும் மாறி மாறி ஆட தலைமைக் கிளார்க்கைக் கேட்டார் :

‘இந்தப் பொண்ணுக்கு ஏன் சம்பளம் கொடுக்கலை? எட்வர்ட். உங்களைத்தான், பதில் சொல்லுங்க”

எட்வர்ட், அளவிஸ்டெண்ட்-டைரக்டரை, தனது அஸிஸ்டெண்ட் போல் முறைத்துக்கொண்டு, அக்கம்பக்கத்தின் அங்கீகாரத்திற்காக அவர்களையும் பார்த்துக்கொண்டு பதிலளித்தார் : “காஷவைல்னு யாரையும் நியமிக்கப்படாதுன்னு போன வாரம் சர்க்குலர் வந்ததைக் காட்டினேனே. நீங்க அதைப் படித்ததுக்கு அடையாளமாய் கையெழுத்து வேற போட்டிருக்கீங்களே.”

அரசாங்கத்தின் சிக்கன நெறிகளை வகைப்படுத்தி பெரிய புராணம் போல் வந்த ஒரு கற்றைத்தாள்களை படிக்கச் சோம்பல்பட்டு, படித்தது போல் கையெழுத்துப் போட்ட அருணாசலம், இப்போது அரண்டு போனார். இந்தச் சமயத்தில் மோகன், சரோசாவுக்கு ஆதரவாக, இருந்த இடத்தில் இருந்தபடியே விவரம் சொன்னான் :

“அதே சமயம், அந்த சர்க்குலர்ல மேலிடத்தின் பெர்மிஷன் வாங்கி காஷவைல் லேபர் வச்சுக்கலாமுன்னும், வச்சிருக்கவங்களை எடுக்காண்டாமுன்னும் ரெண்டு வரி இருந்துதே. எட்வர்ட் சாருக்கு அதைப் படிக்கும்போது கண்ணு குருடாயிட்டா? இந்தப் பொண்ணு சம்பளம் வாங்கப் போறேன்னு சொன்னாளே, அப்ப மட்டும் காது செவிடாயிட்டா?”

எட்வர்ட் கண்களை வெட்டுக்கிளி போல் துள்ளவிட்ட போது, டெப்டி டைரக்டர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் கேட்டார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/267&oldid=636722" இலிருந்து மீள்விக்கப்பட்டது