பக்கம்:தாழம்பூ.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தாழம்பூ

குலைக்கத்தான் செய்வாள். நாமா இருந்தால் கடிச்சிருப்போம். நம்ப வச்சு கழுத்தறுத்துட்டீங்களே! இந்தாம்மா சரோசா, ஏன் அழுவுறே? இந்தா, என் சம்பளம் முழுகம் ஒனக்கு வேலைக்குக் கூலியாயும், இவங்களோட அகம்பாவத்துக்கு அபராதமுமாவும் தாறேன்.”

இளங்கோ, ஆவேசப்பட்டு தனது சட்டைப் பையைக் கிழித்தான். அந்த வேகத்தில் இடது கையிலிருந்த பை அவனது வலது கைக்குள் ஒரு சதுரத்துணியாக நூறு ரூபாய் நோட்டுக்களோடு வெளிப்பட்டது. அந்தத் துணியோடு அந்த நோட்டுக்களை சரோசாவின் கைக்குள் திணித்தான். அவளோ, அவற்றை அவனது வலப்புறச் சட்டைப் பைக்குள் திணித்தாள். பிறகு அவன் காலடியில் அப்படியே விழுந்தபடி கதறினாள் :

“நீ சொன்னதே போதும் சாரே. இந்த கவர்ன்மெண்டு பொறுக்கிங்க இடத்திலே, நீ கண்டிஷனா இருக்கதே போதும் சாரே. சத்தியமா சொல்றேன் சாரே, நான் மட்டும் உங்கம்மாவை அப்படி திட்டாட்டால், கோவிந்து ருக்குவக் கொன்னுருப்பான். நீயும், பாமாவும் பழையபடியும் சந்தோஷமா இருந்தா, அதுவே எனக்கு சம்பளம் கிடைச்சது மாதிரி சாரே! ஆனாலும், என்னால தாங்க முடியலையே சாரே. அநாவசியமா உன் பேரு இழுபடுமேன்னு பார்த்தேன்; இல்லாக்காட்டி இவனுவள கறாப்புட்டு செய்திருப்பேன்.”

முனியம்மாவும் கிட்டத்தட்ட அழுதுவிட்டாள். அவளுக்காக தான் ஒளிந்து கொண்டரை நினைத்தபோது அவள் அழுகை அதிகமாய் வலுத்தது. இந்த விபரீத நிலையிலிருந்து எப்படிக் கழட்டிக்கொள்ளலாம் என்றுபுளியாமல் அஸிஸ்டெண்ட்-டைரக்டர் அருணாசலம் அங்கும் இங்குமாய் வாக்கிங் போனார். சரோசா, இளங்கோவின் பாதங்களை ஆதாரமாய் பிடித்தபடியே எழுந்தாள். ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டாள். அவனுக்காக அவர்களை விட்டுவிட்டதுபோல் வெளியேறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/270&oldid=636727" இலிருந்து மீள்விக்கப்பட்டது