பக்கம்:தாழம்பூ.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தாழம்பூ

“ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார். ஆகையால் ஒரு வருட வனவாசத்தை அந்த ஒரே நாளில் ஈடுகட்ட விரும்பினார்.

இங்கே சரோசா என்கிறது யாரு என்று அதட்டலாக கேட்டார்.

சரோசாவை, யாரோ ஒருவர் சைகையால் கட்டிக்காட்ட போலீஸ்காரர், அவள் முன்னால் போய் நின்று அதட்டினார்.

“நீதானே சரோஜா என்கிறகேடி? உன்ன முன்னிப் பின்ன பார்க்காமல் எப்படிக் கண்டுபிடிச்சுட்டேன்னு நினைக்கிறியா? அதுதான் உன் மூஞ்சியிலயே எழுதி இருக்கே?”

சரோசாவுக்கு சம்பளம் கிடைத்துவிட்டதா என்று அவளிடமே கேட்பதற்காக, உள்ளே வந்த இளங்கோ, வாசலில் சிறிது நின்றுவிட்டு, பின்னர் போலீஸ்காரரை நெருங்கிக் கேட்டான்.

“அப்படி என்ன சார் இந்தப் பொண்ணுதப்புப் பண்ணிட்டு?

“தப்புக்கும் தவறுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா? இவள் செய்தது தப்பும் இல்ல, தவறும் இல்ல. ஒரு கொலை, துரை என்கிற கள்ளச்சாராய வியாபாரியைக் கொன்னு, கோணி மூட்டையில் கட்டி மகாபலிபுரம் கடலுல போட்டிருக்காள். ஏய்! நடடி ஸ்டேஷனக்கு. நீ கெட்ட கேட்டுக்கு ஒனக்கு கவர்மெண்டு 6?’

அதுவரை அந்த போலீஸ்காரரை முகம் மாறாமல் பார்த்தபடி நின்ற சரோசா, அப்படியே சரிந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். இரண்டு கைகளையும் எடுத்து தன்னை அறியாமலேயே தலையில் வைத்து அசைவற்றிருந்தாள். பிறகு அவள் கண்முன்னால் ஆடிய லத்திக் கம்பின் ஊசலாட்டத்தைக் காணும் சுரணை இன்றி ஒப்பாரியிட்டாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/272&oldid=636730" இலிருந்து மீள்விக்கப்பட்டது