பக்கம்:தாழம்பூ.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தாழம்பூ

உணர்வு ஏற்படும்? இதற்குள் ஒரு ஆட்டோ ரிக்ஷாவை போலீஸ்காரர் அதட்டிக் கூப்பிட்டார். அது அவர்கள் முன்னால் வந்து உறுமியபோது, சரோசா போலீஸ்காரர் அதட்டும் முன்னாலேயே ஏறிக் கொண்டாள்.

ஆட்டோவிற்கு,போலீஸ்காரர்கையால் வழிகாட்டியபோது, முனியம்மா அங்கே ஓடிவந்து, போலீஸ்காரர் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அதிசயமாகப் பார்த்த அவர், ஆச்சரியத் தொனியில் கேட்டார்:

“அடடே.முனியம்மா,என்ன இப்படிஜேம்ஸ்பாண்ட்மாதிரி?” “அப்போ நீ என்ன ஆபீஸ்ல பார்க்கலியா?”

“எந்த ஆபீஸ்ல?” “அதே அந்த கேடி ஆபீஸ்ல; திருட்டு ஆபீஸ்ல; தெனாவட்டு ஆபீஸ்ல; அங்கதான் வேலை பாக்கேன். சொந்தப் பெரியப்பா பிள்ளையா இருந்தும், நீ என்னை கண்டுக்கலியேன்னு எனக்கு எப்படி அழுகை வந்தது தெரியுமா?”

‘தப்பா நினைக்காதே தங்கச்சி. ஒரு போலீஸ்காரனுக்கு எப்பவுமே குற்றவாளிமேலதான் கண்ணு இருக்கும். வீட்டுல வந்து ஆற அமர பேசறேன். இப்ப நீ இறங்கு”

“வழியிலேயே இறங்கிக்கறேன் அண்ணே.”

“ஆட்டோ, நீ பாட்டுக்கு ஒட்டுப்பா"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/276&oldid=636736" இலிருந்து மீள்விக்கப்பட்டது