பக்கம்:தாழம்பூ.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த ஆட்டோ அதுபாட்டுக்கு ஓடியது. முனியம்மா தனது அண்ணன்-போலீசிடம் சரோசாவைப் பற்றி தனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொண்டே வந்தாள். “பாவமண்ணா. என்ன மாதிரி கேஷவல். அடுத்தவங்க கஷ்டப்பட பொறுக்காதவள். இவளோட குடும்ப நிலமை எனக்குத் தெரியும். கொலை செய்யக்கூடியவள் இல்லண்ணா.அவளோடமுகத்தை உத்துப் பாரு, உனக்கே தெரியும்”

“அதனாலதான் சொல்றேன், நீ இதுல தலையிடாதேன்னு. அதோட, பெரியபெரிய ஆளுங்க கிட்ட இருந்துபோன்மேல போனா வருது. இவள் ஸ்டேஷன்லகொண்டு ஒப்படைக்கதுதான் என்னோட வேலை.”

சரோசா,அவர்கள் பேசுவதைகாதில் வாங்காமலும், கண்ணில் விழும்படி ஏறெடுத்துப் பார்க்காமலும் ஆட்டோவுக்குப் பின்புறமாக இரண்டு கைகளையும் நீட்டியபடி அப்படியே கிடந்தாள். இதற்குள் அந்த ஆட்டோ கத்திக்கொண்டும், கதறிக்கொண்டும், மூன்று கிலோ மீட்டர் வரை ஓடிவிட்டது. இடது பக்க ஒரு மாடிக் கட்டிடத்தைப் பார்த்த முனியம்மா, அதை அந்த ஆட்டோ சிறிது கடந்த பிறகு, ஆட்டோவை நிறுத்தும்படி டிரைவரின் சட்டையைப் பிடித்து இழுத்தாள். அது நின்றதும்,போலீஸ் அண்ணனிடம் முறையிட்டாள் : “என்னைப்பத்தி உங்களுக்குத் தெரியுமுண், தலையை அடகு வச்சாவது சொல்லுற சொல்லைக் காப்பாத்துறவள். இந்தப் பொண்ணு அதோ அந்த வீட்டில் ஐநூறு ரூபாய்கடன்வாங்குனாள். இவளுக்கு நான்தான் ஜாமீன் போட்டேன். ஜெயிலுக்குப் போற இவளோட கடன கொஞ்சம் கொஞ்சமா அடைக்கேன்னு கடங்காரம்மாகிட்டே சொல்லணும். அதுக்கு இந்தப் பொண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/277&oldid=636737" இலிருந்து மீள்விக்கப்பட்டது