பக்கம்:தாழம்பூ.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 265

போலீஸ்காரரும் இறங்கினார். வீடு பக்கத்தில்தான் இருக்கு ரூபாயோ பையில; ரெண்டு எட்டு நடந்து காலைல உதைபட்ட மனைவியோட கன்னத்தை அந்த நோட்டால் தடவலாமா என்று யோசித்தார். இந்தச் சாக்கில் சரோசா ஒடிவிடக்கூடாதே என்று ஒரு பயம். ஆகையால் முன்னால் நடந்த அந்தப் பெண்களின் பின்னால் இவரும் நடந்தார்.

சரோசா, தன் கையைப் பிடித்திருக்கும் முனியம்மாவைத் தட்டி விட்டுவிட்டு ஒழனால், அவளைத் தாவிப் பிடிப்பதற்குத் தயாராக போலீஸ்காரர் பக்கவாட்டில் நடந்தார். ஒருவேளை, தங்கச்சியும் இதற்கு உடந்தையாக இருக்கலாமோ என்று அவளையும் பார்த்தார். இன்சூரன்ஸ் ஏஜெண்ட் எல்லார் உயிருக்கும் ஆபத்து என்று நினைக்கிற மாதிரி, ‘என் புத்தியும் போலீஸ் புத்தியிலிருந்து மாற மாட்டேங்கே என்று தனக்குள்ளே பேசிக் கொண்டார். -

இதற்குள், சரோசா நடந்த நடையும், பார்த்த பார்வையும் அவள் விழுந்தாலும் விழுவாளே தவிர, ஒடமாட்டாள் என்று அவரது அனுபவ அறிவு உணர்த்தியது. அந்த இரண்டு பெண்களும் அந்தத் தெருமுனையை திரும்பியபோது அது ஒரு முட்டுச்சந்து என்பதாலும், இவருக்குப் பசி வயிற்றை முட்டியதாலும், “சீக்கிரமா வந்துடு தங்கச்சி, சீக்கிரமா கூட்டிட்டு வந்துடு தங்கச்சி” என்று சொல்லியபடியே ஆட்டோ பக்கம் வந்தார்.

இதற்குள், முனியம்மா சரோசாவை கூட்டிக்கொண்டு ஒரு கட்டிடத்தின் மாடிப்படிகளில் ஏறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/279&oldid=636740" இலிருந்து மீள்விக்கப்பட்டது