பக்கம்:தாழம்பூ.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 தாழம்பூ

அந்த அம்மாவுக்கு அவள் சொன்னதில் பெருமைப்படுவதா அல்லது சிறுமைப்படுவதா என்று தெரியவில்லை. முழுமையாகப் பலன் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும், பாதி அளவுக்காவது பலிக்கிறதே என்ற திருப்தியும் முகத்தில் ஒருசேரத் தெரிந்தது. பிறகு இதற்கெல்லாம் தான் மட்டும் காரணமல்ல; அதோ தன் முன்னால் நாற்காலிகளில் உட்கார்ந்திருக்கும் ஐந்தாறு பெண்களும், அந்த அமைப்பும் காரணம் என்பதுபோல் அவர்களைப் பார்த்தாள்.

அந்தப் பெண்களில் இருவர், அந்த அம்மாவைப் போல் நடுத்தரங்கள். அவர்கள் முகங்களிலும் தீட்சண்யப் பார்வை. எஞ்சிய மூவரில் இருவர் இளம் பெண்கள். ஆனாலும், ஒருவித முதிர்ச்சியான பார்வை. ஒரே ஒருத்தி மட்டும் அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தோற்றத்தை வைத்து எதுவும் அனுமானிக்க முடியவில்லை.முனியம்மா, சரோசாவையே பார்த்துக் கொண்டிருந்த அந்த அம்மாவுக்குக் கோடி காட்டினாள்.

“இதோ பித்துப் பிடிச்சு நிக்குதே பாவிப்பொண்ணு, இது பட்டயாடும், படும் பாடும் கொஞ்சநஞ்ச மில்லம்மா. செய்யாத ஒரு குற்றத்தை, அதிலும் கொலைக் குற்றத்தை செய்ததா போலீஸ், ஒரு பெரிய மனுஷன் துரண்டுதல்ல பழி போட்டிருக்கும்மா. இப்பவும் கீழ போலீஸ்காரரை ஆட்டோவில் காக்க வைச்சுட்டு வந்திருக்கேம்மா. நீங்க மட்டும் இப்ப எங்ககூட வராட்டா, இவள, ராத்திரியோட ராத்திரியா ஏதாச்கம் செய்துடுவாங்கம்மா, ஏய் சரோ, நான் முன்னால ஒன்கிட்ட அடிக்கடி சொல்லுவேன் பாரு, அந்த அம்மா இவங்கதான். இன்னிக்கு என்னை என் ஆம்படையான் தெருவில போட்டு உதைக்காம இருக்கான்னா, இதுக்கு இவங்கதான் காரணம். இப்பக்கூட இவங்க பேர் எனக்குத் தெரியாது; ஆனா, அம்மாவுக்கு பேர் எதுக்கு?

‘தப்பும்மா! எனக்கும் உனக்கும் இதோ இங்க இருக்கவங்களுக்கும் அம்மா நம்ம மன்றம்தான். என்றைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/282&oldid=636746" இலிருந்து மீள்விக்கப்பட்டது