பக்கம்:தாழம்பூ.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 269

தனிப்பட்டவங்க ஒரு அமைப்பைவிட உயரமா தெரிய ஆரம்பிக்கிறாங்களோ, அப்பவே அந்த அமைப்போட உயிர்த்துடிப்பு போயிடும். நாங்க அரசியல் கட்சிகள் மாதிரி இல்ல. நாங்க எல்லோரும் ஒருவர்தலைமேல் ஒருவர்ஏறி நின்னாலும் இந்த மன்றம் தான் அதிக உயரம்”

“சரிம்மா. இந்தப் பொண்ணுக்கு.”

அந்தம்மாவும், அங்கு இருந்த இதரப்பெண்களும், பெஞ்சிகளில் இருந்த பஞ்சைப் பராளிகளும் சரோசாவை ஒருசேரப் பார்த்தார்கள். எந்தப் பிரச்சினைக்கும் ஒரு முடிவு கிடைக்கும் என்பதுபோல் நாற்காலிப் பெண்கள் அவளுக்கு நம்பிக்கை தரும் வகையில் பார்த்தபோது, பெஞ்சிப் பெண்களோ, கஷ்டம் என்பது தங்களுக்கு மட்டும் உரியதல்ல என்பது போல், அவளை கண்சாய்த்துப் பார்த்தார்கள். ஆனால் சரோசாவோ, “தொரண்ணே, தொரண்ணே” என்று வாய் கூவிக் கொண்டிருக்க, அதில் மட்டும் உயிரை வைத்திருப்பவள் போல் அசைவற்று நின்றாள்.

அவளையே பார்த்தபடி அந்தம்மா மேஜையில் கையூன்றி எழுந்தாள். அவள் அருகே போனாள். அவள் மோவாயை நிமிர்த்தினாள்.வெறுமையாய் கிடந்த அவள் கண்களை தலையோடு சேர்த்துத் தடவி விட்டாள். அவள் தோளில் கை போட்டபடியே மேஜையோரம் இருந்த பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்து கொண்டு ஆவேசமில்லாமலும், அதே சமயம் ஏனோ தானோ என்று இல்லாமலும் தன்னம்பிக்கையோடு ஆறுதல் சொன்னாள் :

‘இந்தா பாரும்மா, உன் மேல தப்பில்லன்னா எந்த போலீகம், எந்த ரவுடியும், எந்த கோர்ட்டும் உன்னை தண்டிக்க முடியாது. ஒருவேளை நீ இந்த மன்றத்துக்கு வராமல் இருந்தா அது பேற விஷயம். எப்போது எங்க கிட்ட நீ வந்திட்டியோ அப்போ நீ செய்யாத குற்றத்துக்குத் தண்டனை வாங்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/283&oldid=636747" இலிருந்து மீள்விக்கப்பட்டது