பக்கம்:தாழம்பூ.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 27)

என்றாலும் சொல்லு இல்ல, அந்த அறைக்குள்ளவந்துசொல்லனும் என்றாலும் சொல்லு” என்றாள்.

சரோசா, தன் பார்வையில் பட்ட அனைவரையும் பார்த்தாள். அத்தனை முகங்களிலும் அவளுக்கான ஒரு ஆறுதல் பார்வை இருப்பதைக் கண்டுகொண்டது போல் முகத்தைத் துடைத்தாள். தன்னாலும் மீள முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அண்ணாத்தைக்கும் சவால்விட ஆட்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. மண்ணில் பிறந்தது, பெண்ணாய்ப் போனது, ஆத்தா ஒடியது, அவள் தாத்தாவளர்த்தது, எடுபிடிவேலைசெய்தது, ஏளனமாய் நடத்தப்பட்டது,போலீஸ் தொல்லைகள், போக்கிரிகளின் சீண்டல்கள், அதனால் துரையண்ணன் மூலம் அண்ணாத்தையிடம் அடைக்கலமானது, சாராய உறவுகள், இளங்கோவுடன் போட்ட சண்டை, அவனை ஆளை வைத்து அடித்துப் போட்ட அடாவடித்தனம், அவனால் மனுஷியாகி, இப்போது ஆபீஸ்காரர் களால் மீண்டும் பழைய நிலைக்கப் போக வேண்டும் என்ற எண்ணமும், அப்படிப் போய்விடுவோமோ என்ற அச்சமும் கலக்க, அவள் ஒன்று விடாமல் சொன்னாள். அவள் அனுபவித்த துயரங்களைக் கேட்கக் கேட்க அங்குள்ள அத்தனை பேருக்கும் காதுகள் போதாது என்பதுபோல்,பலர் இரண்டுகைகளையும் தத்தம் காதுகளுக்கு மேல் காதுகளாகக் குவித்துப் போட்டார்கள்.

அவள், தனது கதையை, கருக்கியும் சொல்லாமல், விரியவும் விடாமல் ஒப்பித்தபோது, அவள் சொல்வதை ஆரம்பத்தில் இப்படித்தான் எல்லோருக்கும் நடக்குது என்ற தோரணையில் பார்த்த அந்த அம்மா, இறுதியில் முகம் வெளிறிப் போனாள். அவள் வார்த்தையில் தொனித்த சத்திய ஒலியில் கட்டுண்டவள் போல், சரோசாவின் முகத்தைத் துடைத்துவிட்டு, கண்ணிரைச் கண்டி விட்டாள். பிறகு, பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கேட்டாள் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/285&oldid=636750" இலிருந்து மீள்விக்கப்பட்டது