பக்கம்:தாழம்பூ.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த ஆட்டோ போலீஸ் வளாகத்திற்குள் பாய்ந்தது. ஆட்டோவிற்குள் சரோசாவிடம் கரிசனம் காட்டிய அந்த போலீஸ்காரர், இப்போதுலத்திக்கம்பாலேயே சரோசாவை நெட்டித் தள்ளி கீழே இறக்கினார்.கூடவரப்போன முனியம்மாவை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டார்.

சரோசா, அந்தப் போலீஸ்காரரோடு முதல் மாடிக்கு வந்தாள். இன்ஸ்பெக்டரின் அறைக்கு வெளியே அவளுக்கு வேண்டியவர்களும், வேண்டாத ஒருத்தியும் கவரோடு கவராய் நின்று கொண்டிருந்தார்கள்.தலையை தொங்கப்போட்டு நின்றருக்குமணி, அவள் தோளைத் தட்டிக் கொடுக்கும் கோவிந்து, அவள் கையைப் பிடித்து வீட்டுக்குப் போகலாம் என்பது மாதிரி தன்பக்கம் இழுக்கும் ஆறுமுகப்பயல், பத்துப் பதினைந்து குடிசை வீடுகளுக்குச் சொந்தக்காரியான ஒரு கிழவி, எல்லாவற்றுக்கும் மேலாக தரையில் முட்டிக்கால்களை மேலே தூக்கி, முகத்தைக் கீழே வளைத்துக் கிடக்கும் நாயினா.

வீட்டுக்காரி, சரோசாவைப் பார்த்துக் கத்தினாள் : “பாவி, கெடுத்தியேடி.கொலைகாரிக்கு என் வீடுதானா கெடைக்கணும்? ஆமை புகுந்த வீடு மாதிரி என் வீட்டை ஆக்கிட்டியேடி. போலீஸ்காரங்க உன்னால என்னையும் பிடிச்சு வைக்கிறது என்னடி நியாயம்? உடனே போய் அந்தக் கொலைக்கும் வீட்டுக்காரம்மாவுக்கும் சம்பந்தம் இல்லேன்னுபோலீஸ்ல போயிச் சொல்லுடி.”

சரோசா, வீட்டுக்காரியை விநோதமாகப் பார்த்தாள். ருக்குவைப் பார்த்த போது பீறிட்ட அழுகை நாயினாவைப் பார்த்தபோது வெறும் ஒலி வடிவங்களாய் உருமின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/287&oldid=636753" இலிருந்து மீள்விக்கப்பட்டது