பக்கம்:தாழம்பூ.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தாழம்பூ

நழுவப் போன கிரைம் சப்-இன்ஸ்பெக்டரை சிட்-டவுன் என்றார். பிறகு பட்டும், படாமலும் பார்த்தபடியே, நீதிமன்றங்களில் கூறப்படுமே கசங்கிப்போன வார்த்தை, “சொல்வது அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை” என்ற தொனியில் பேசினார்:

‘நீங்க நினைக்கிறது மாதிரி இல்லம்மா. இந்தப் பொண்ணோட புகார் கமிஷனர்கிட்டேயிருந்து என்கிட்டே என்கொயரிக்கு வந்தது.நான் விசாரிக்கப்போனேன்.அப்போதுதான் ஒரு அக்கிரமம் தெரிஞ்கது.துரை என்கிற கள்ளச்சாராயக்காரனோட பிணம், ஒரு கோணிப்பையில் மகாபலிபுரம் கடலுல மிதந்ததுக்கும், இவளுக்கும் சம்பந்தம் இருக்குது. நாங்காளா தேடாமல் தானாக கிடச்ச கேஸ்.”

“தொரண்ணா, அய்யோ. தொரண்ணா.”

“ஏய், கம்மா இருடி.”

இன்ஸ்பெக்டர் அப்படிக் கத்திவிட்டு, முகம் குன்றிய அந்தம்மாவை, குற்ற உணர்வோடு பார்த்தார். நீண்டகாலப் பழக்கம் அப்படிப் பேச வைத்து விட்டது. அதைச் சரிக்கட்டும் வகையில், “இந்தாப்பா, ஏழு கப் டி வாங்கிட்டு வா” என்று சத்தம்.போட்டார். வெளியே நிற்கும் எந்த சிபாரிகக்காரரின் காதுலயாவது விழுந்து அவன் வாங்கிக்கிட்டு வருவான் என்கிற நம்பிக்கை. பிறகு அவர், கதை சொல்வது போல் சொன்னார்:

“நான் நேரடியா விசாரிக்கலதான். எங்கம்மா இந்த செக்யூரிட்டி காலத்துல டைம் இருக்குது? ஊருக்கு இளைச்சவன் இன்ஸ்பெக்டர். சரி அந்தக் கதையை விடுங்க. இவரு கிரைம், சப்-இன்ஸ்பெக்டர். அவரை விசாரிக்கச் சொன்னேன். இவர் விசாரணையில் இந்த சரோசா கள்ளச் சாராயம் கடத்தினவள் என்கிறதும், இவளுக்கும் கொலையான துரைக்கும் ஏதோ தகராறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/292&oldid=636762" இலிருந்து மீள்விக்கப்பட்டது