பக்கம்:தாழம்பூ.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 279

ஏற்பட்டு, இரண்டு பேரும் பிரிஞ்கட்டாங்கன்னும் தெரிய வந்தது. ஒருநாள், நைட்ல இவள், நாயினா வெளியில கிடக்கிறானே ஒரு கிழவன், அவனோட, துரை வீட்டுக்குப் போயிருக்காள். அவனைக் கண்டபடி திட்டியிருக்காள். துரை பொண்டாட்டி இதைத் தட்டிக் கேட்டிருக்காள். உடனே இவள், அவளையும் பிடிபிடின்னு பிடிச்சிருக்காள். அந்தம்மா, கொஞ்சம் நாகரிகமானவள். கதவைப் பூட்டிக்கிட்டாள். அன்னிக்கி ராத்திரியே கொலை நடந்திருக்கு. சூழ்நிலை சாட்சியங்கள் இவளைத்தான் கொலைகாரின்னு கட்டிக்காட்டுது.”

இன்ஸ்பெக்டர், தான் பேசியது சரியா என்பதுபோல், சப்-இன்ஸ்பெக்ட்ரை கண்ணசைத்துப் பார்த்தார். அவரும் தலையாட்டினார். அப்போதுசிறிதுநிசப்தம். அதைக்கலைத்துதேநீர் கோப்பைகளின் சவசலப்புக்களில்,அந்த அம்மாவுடன்வந்த பெண்கள், கவரில் சாய்ந்தபடி, சுவாசிப்பதில் மட்டுமே உயிரை வைத்திருப்பது போல் தோன்றிய சரோசாவையே பார்த்தார்கள். அந்த அம்மாவும் தம்மிடம் நீட்டப்பட்ட தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்டாள். ஆனால், வாயருகேகொண்டுபோகவில்லை. சரோசா குற்றமற்றவள் என்று நம்பிக்கைஏற்பட்டாலும், அவள் கண்ணிரும், கம்பலையுமாய், அவசர அவசரமாய் தன்னிடம் கூறிய தகவல்களை மீண்டும் சரிபார்க்கவேண்டும்போல் இருந்தது. சரோசாவையே இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பேசச் சொல்லலாமா, அதற்கு அவர் சம்மதிப்பாரா என்று அந்தம்மாள் யோசித்தாள். இந்த யோசனை வேளையையே தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்வது என இன்ஸ்பெக்டர் உபதேசிதார்:

“பேசாமல் வரதட்சணைக் கொடுமை, விவாகரத்து, விதவைப் பிரச்சினை, பெண் தொழிலாளர் சம்பளம் இந்த மாதிரியான பிரச்சினைகளை மட்டும் எடுத்துக்கங்கோ மேடம். சேரிப் பொண்ணுங்கக் கிட்ட வராதீங்கோ. இவளுக ஒங்களையும் பார்ப்பாளுங்க, எங்களையும் பார்ப்பாளுங்க”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/293&oldid=636763" இலிருந்து மீள்விக்கப்பட்டது