பக்கம்:தாழம்பூ.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 28]

“ஆனா, என்னால மறுக்க முடியும் சார்” அங்கிருந்தவர்களும், இன்ஸ்பெக்டரும் குரல் வந்த திசையை நோக்கியபோது, அவர்கள் கண்களில் முட்டுவதுபோல் கான்ஸ்டபிள் திருமலையப்பன் உள்ளே வந்தார். இன்ஸ்பெக்டரை அடிக்கப்போவது போல் ஒரு சல்யூட் போட்டார். பிறகு, தண்ணிர்கொட்டுவதுபோல் ஒப்பித்தார்:

“துரை கொலை செய்யப்பட்டதாய் கூறப்படும் ராத்திரி, எனக்கு ருைட்டுல பீச்கல பீட்டு சார். இந்த சரோசாவ, ஐந்தாறு ரவுடிங்கதொரத்தி வந்தாங்க. நான்தான் ஒடிப்போய் இவளையும், இவள் நாயினாவையும் காப்பாத்தினேன். ரெண்டு பேரையும், என் பாதுகாப்புல வச்சிட்டு, மறுநாள் காலையில பூக்காரி ருக்குமணி வீட்டுல விட்டுட்டு வந்தேன்.”

இன்ஸ்பெக்டர், திகைத்துப் போனபோது கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தன்னையும், அறியாமலேயே கத்தினார் :

“ஆக நீ ஒரு கொலைகாரிக்கு புகலிடம் கொடுத்திருக்கே. ஒன்னை சர்வீஸிலிருந்து சஸ்பெண்ட் செய்து, ஒன் யூனியாரத்தை நானே கழட்டுறேன் பார்.”

திருமலையப்பன் வீறாப்பாய் நின்றார். இதற்குள் கறுப்பு அங்கி போட்ட பெண் எழுந்தாள். அத்தனை சட்டங்களையும் வாய்க்குள் வைத்திருப்பதுபோல் கன்னங்களை பலூன்கள் மாதிரி உப்பவைத்தாள். பிறகு சராமாரியாகப் பேசினாள் :

“இந்தியன் பினல் கோட் சட்டத்தின்படி...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/295&oldid=636765" இலிருந்து மீள்விக்கப்பட்டது