பக்கம்:தாழம்பூ.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 285

அல்லா-ன்னு மனசுக்குள்ளேயே பல தடவை மதம் மாறினேன். ஆனாலும் நீங்க என்கிட்ட உண்மையைச் சொல்லல. உயிருக்கு உயிராப் பழகின ஒருத்திக்கிட்ட உண்மையைச் சொல்லாத ஒருவரு - இப்பக்கூட சொல்றேன் - எனக்குத் தேவையில்ல.”

இளங்கோ, அவனை விக்கித்துப் பார்த்தான். அவள் சொல்வதில் நியாயம் இருப்பது புரிந்தது. “தப்புத்தான்” என்று சொல்லிவிட்டு, அதற்காக அவள் மன்னிக்கவேண்டும் என்பதுபோல் தலைக்கு மேல் ஒரு கும்புடு போட்டுவிட்டு அவளையே தழுதழுத்துப் பார்த்தான். பிறகு கண்களை அங்குமிங்குமாய் ஆட்டிப் பன்னீர் தெளிப்பதுபோல் தெளித்தபடி மீண்டும் நின்ற இடத்திற்கு வந்தான். அவனுள் இப்போது, சரோசாவே முழுமையாக நின்றாள். ‘சரோசாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். சரோசா வலியப் பேசும்போது, நான்முகம் கொடுத்திருந்தால்,அவள் பிரச்சினைகளைச் சொல்லியிருப்பாள். என்மூலம் அவளுக்கு ஒரு வழிகடடக் கிடைத்திருக்கும். ஆனால், இப்போது வழியற்று நிற்கிறாள். போலீஸ்காரன், அவளை அடிப்பதைவிட நான் அவளிடம் பேசாமல் இருந்தது.பெரியகொடுமை. அவளை, அவள் மனசிற்குள்ளேயே சிறை போட்டுட்டேன். அதிலேயே அவள் சந்தோஷத்தையும் துாக்குப் போட்டுட்டேன்.’

இளங்கோ, அந்தப் போலீஸ் வளாகத்தையே வெறித்துப் பார்த்தான். இறுதியில் ஒரு தீர்மானத்திற்கு வந்ததுபோல், அந்தக் காவல் நிலையத்திற்குள் போனான். யாரோ ஒருவர் தோளில் கை போடுவது போலிருந்தது. முகத்தைத் திருப்பினால் ஒரு வளைக்கரம். பின்பக்கமாய் திரும்பினால் பாமா. நீர் முட்டும் கண்களுடன் அவன் தோளில் சாய்ந்தாள். இளங்கோ, அவள் தலையை நிமிர்த்தினான். அவள் தோளைப் பிடித்திழுத்து தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு அவள் கைகளைப் பற்றினான்.

சரோசா, ஐந்தாறு பெண்களுக்கு மத்தியில் அலுங்காமல், குலுங்காமல், அங்கேயும் இங்கேயுமாய் பார்க்காமல், படியிறங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/299&oldid=636769" இலிருந்து மீள்விக்கப்பட்டது