பக்கம்:தாழம்பூ.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தாழம்பூ

கொண்டிருந்தாள். அவளைச் சூழ்ந்திருந்த கும்பலுக்குப் பின்னால் அவள் நாயினாவும், ருக்குவும் கோவிந்தும், வீட்டுக்கார அம்மாவும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

சரோசா, இளங்கோவைப் பார்த்ததும். இறங்கிய படியில் அப்படியே நின்றாள். அவனோடு சேர்ந்து அர்த்தநாரீஸ்வரி போல் நின்றவளைப் பார்த்ததும், அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த அதிரிச்சியில் அவள் மெல்ல மெல்ல சுயஉணர்வு பெற்ற, அவர்கள் பக்கமாய் குதித்தாள். முன்னால் காம்பவுண்ட் கவரிலிருந்து ஏறிக் குதித்தாளே அப்படிப்பட்ட குதிதான்; ஆனால், எவ்வளவு வித்தியாசம்! சரோசா இளங்கோவைக் காட்டி, அந்தம்மாவிடம் ஏதோ பேசப் போனாள். உணர்ச்சிக் குவியலில் பேச முடியவில்லை. முனியம்மா, அவளுக்கு வாய் கொடுத்தாள் :

‘இதுதாம்மா இளங்கோ என்கிற தம்பி. பாவம் இவரையும் ஆபீகல ஒருமாதிரி பார்க்கிறாங்க. ஆயிரத்துல ஒரு தம்பி. இன்னிக்குத்தான் இவரு அதிர்ந்து பேசினத பார்த்திருக்கிறேன். கேஷவல், பர்மனெண்டுன்னு வித்தியாசம் காட்டாதவரு. சாரே! உனிக்கி எப்போ கல்யாணம் ஆச்சு? கடைசியில கேஷவல்னு நீயும் எனக்கு இன்விடேஷன் கொடுக்கல பாரு.”

பாமா, நாணிக்கோணிய போது, முனியம்மா சொன்னதன் தாத்பரியம் புரியாத மனோநிலையில், இளங்கோ “என்ன ஆச்சுது” என்று ருக்குவைப் பார்த்துக் கேட்டான். பிறகு தனது கேள்விக்குரியவள் அந்த அம்மாதான் என்பதுபோல் அவளைப் பார்த்தான். அந்தம்மா, சரோசாவின் கையைப் பின்பக்கமாகப் பற்றி, தன் தோளில் போட்டுக் கொண்டு, அவள் மூக்கைத் தடவி விட்டு, அந்தத் தள்ளாடும் மனிதரை சிறிது நேரம் பார்த்தபடி நின்றவள், இளங்கோவைப் பார்த்து தன்னிலை விளக்கமளித்தாள்:

“நாங்க சமதர்ம மாதர் மன்றத்தைச் சேர்ந்தவங்க. எங்களால ஒரு அண்ணாத்தைக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/300&oldid=636772" இலிருந்து மீள்விக்கப்பட்டது