பக்கம்:தாழம்பூ.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 287

ஆனால், சரோசாவை மாதிரி எளியவங்கள மீட்க முடியும். இனிமேல் இவள யாரும் தொல்லை பண்ண மாட்டாங்கன்னு நினைக்கேன். அப்படிச் செய்யறது எங்கள மட்டுமில்ல, எங்க அமைப்பையும் எங்க அமைப்புக்குப் பின்னால இருக்கிறத ஆயிரக்கணக்கான மனிதாபிமானிகளையும் வம்புக்கு இழுக்கிறதுக்கு சமானமுன்னு போலீசுக்கும் தெரியும், அண்ணாத்தைக்கும் தெரியும்.”

சரோசா, முன்பின் அறியாத அந்தப்புதியபெண்களின் அன்புப் பார்வையில் நெகிழ்ந்தாள். சற்றுத் தொலைவில் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தருக்குமணியை கையாட்டி, தன் பக்கம் கூப்பிட்டாள். மெல்ல மெல்ல நடந்தவளை வேகவேகமாய் பிடித்திழுத்து, அவள்முதுகுக்கு கவர்போல் ஆனாள்.இளங்கோவைப் பார்த்துவிட்டு, அவன் அருகே இருக்கும்பாமாவையும்பார்த்துவிட்டு, அவர்கள் இருவரையும் கண்களால் சோடி சேர்த்துப் பார்த்த மகிழ்ச்சியில் லேசாய் தலையாட்டினாள். உடனே, அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டவள்போல், பாமா, இளங்கோவை ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு சரோசாவின் பக்கம் போய் நின்று கொண்டாள்.

அந்தம்மா, தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தாள், புறப்படுவதற்கு ஆயத்தமாக கால்களை செருப்பு நுனிவரை நகர்த்திவிட்டு, பிறகு முக்கியமான ஒன்றைச் சொல்ல மறந்ததுபோல், செருப்புக்களை அகற்றிவிட்டு, சரோசாவைப் பார்த்துக் கேட்டாள் :

‘ஒனக்கு ஆபீகல வேலையும் போயிட்டுது. இனிமேல் நிச்சயம் சேர்க்க மாட்டாங்க... ஒரு மாசம் வரைக்கும் மட்டும்தான் கேஷவலா இருந்த ஒனக்கு எங்களால் அந்த ஆபீகல எதுவும் செய்யவும் முடியாது. அமைச்சர்கிட்ட சொன்னாலும் கடைசியில அதுல ஒரு கிளார்க்தான் முடிவெடுப்பான்.”

ருக்கு, சரோசாவை தன் பக்கமாக இழுத்து வைத்துக்கொண்டு அந்த அம்மாவிடம் கெஞ்கவதுபோல் பேசினாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/301&oldid=636773" இலிருந்து மீள்விக்கப்பட்டது