பக்கம்:தாழம்பூ.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தாழம்பூ

“ஆமாம்மா... அந்த ஆபீகல செத்துப் போன ஒரு டிரைவரோட சம்சாரத்துக்கே ஒன்பது மாசம் ஆகியும் பாடாதிப் பசங்க பென்ஷன் தரலயாம். சரோசா அதுக்காக எவ்வளவு வருத்ததப்பட்டா தெரியுமா? அப்புறமா, நாயினாவோட தனி மரமா நிக்கிற இந்த தற்குறிக்கி, நீங்கதாம்மா, ஒரு வழி காட்டணும். அவளுக்கு யாருமே இல்லம்மா. திருந்தினவங்களுக்கு சரியான வழி கிடைக்காட்டி, அப்படித் திருத்துறது, பாதிக்கிணறு தாண்டினது மாதிரிம்மா. பல்லும் பூடும்; சொல்லும் பூடும். இல்லியா கோவிந்து மச்சான்?” -

கோவிந்து மச்சானுக்கு இல்லியா என்பது'மில்லியா என்று கேட்டது; உடனே, அதற்காக அவன் மகிழ்ந்து போய் தலையாட்டினான்.அந்தம்மாசற்றுவிலகிப்போய்நின்றுகொண்டு தன்னுடன் வந்த பெண்களை அங்கே வரும்படி முகம் ஆட்டினாள். அந்தப் பெண்கள் அவள் அருகே போனார்கள். எல்லோரும் கும்மி அடிப்பது போல் வட்டமாய் நின்று கொண்டு தலைகளைக் குவித்தார்கள். சிறிது நேரத்தில் அந்தம்மா சிறிது, முன் நடந்து, சரோசாவின் தோளில் கைபோட்டபடியே அபயம் அளித்தாள். அவன் முகத்தை நிமிர்த்தியபடியே, அவள் பிரச்சினைக்கு, விடையளித்தாள்:

“எங்க அமைப்புக்கு ஒன்ன மாதிரி பல அபலைப் பெண்கள் வராங்க. பெரிய இடத்து அபலைகள், சிறிய இடத்து அபவைகள்னு. இதில் சாதி பேதமோ, அந்தஸ்து வித்தியாசமோ கிடையாது. அபலைங்க என்கிற ஒரோயொரு அந்தஸ்துதான். இவங்களுக்காக பல இடங்களில் பல ஆபீசர்களுக்கு லட்டர் எழுதுறோம். அதுகளை கொண்டு கொடுக்கணும். எங்க சங்கத்துக்கு பல கிளைகள் இருக்குது. அவங்களுக்கு சர்க்குலர் கொண்டு போகணும். அவங்க எழுதுற லட்டர்ங்களை கொண்டு வரணும். ஆபீசையும் பார்த்துக்கணும். ஆபீசுக்கு இப்போ கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்குறோம். அதுல ஒரு குடியிருப்பும் கட்டுறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/302&oldid=636774" இலிருந்து மீள்விக்கப்பட்டது