பக்கம்:தாழம்பூ.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 289

அது தயாரானதும், நீ அங்கேயே ஒன் தாத்தாவோட தங்கிக்கலாம். நான் சொன்ன வேலையெல்லாம் செய்யறதுக்கு ஒனக்கு மாசம் 700 ரூபா தாறோம். உன்ன வேலைக்காரியா கூப்பிடல. எங்களில் ஒருத்தியாகத்தான் கூப்பிடுறோம். நானே இப்படி வந்தவள்தான். உன்ன, பணிவிடைக்காகக் கூப்பிடல. எங்க பணிகளைப் பங்கிட்டுக்கத்தான கூப்பிடுறோம். எங்களுக்குத் தெரிஞ்ச ஒரே வார்த்தை, தோழர்’, ‘தோழியர், என்கிறதுதான்; வேலைக்காரன், வேலைக்காரி என்கிறதில்லை. என்ன சொல்றே சரோசா?”

பல பொதுக்கூட்டங்களை இஷ்டத்துக்கு விரோதமாகக் கேட்டுப் பழகிய ருக்குமணி, தன்னையும் அறியாமலேயே கை தட்டினாள். சரோசாவை தூக்கிப் பிடித்து அவள் கன்னத்திலும், உச்சியிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

சரோசாவுக்கு உச்சி முதல் பாதம் வரை எதோ ஒன்று, பூப் பூவாய் விழுவதுபோல் இருந்தது. மனதிற்குள் இதயம் என்று சொல்லுகின்ற இடம் பிரபஞ்சம்போல் விரிவது மாதிரி தோன்றியது. இதுதான் மகிழ்ச்சி என்று ஏதோவொன்று முதன்முறையாய் அவளிடம் உணர்த்திக் கொண்டிருந்தது. இதயத்தை யாரோ பூவால் வருடிவிடுவது போல் இருந்தது. அங்கிருந்து வாய்க்குள் சிரிப்புச் சிரிப்பாய் ஏதோவொன்று வந்தது. அதுவே அழுகை அழுகையாயும் நின்றது. அவள் தன் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ள ஆள் தேடுபவள் போல் இளங்கோவையும், பாமாவையும் ஒருசேரப் பார்த்தாள். ருக்குவை தனித்துப் பார்த்தாள். பின்பக்கமாய் நின்ற நாயினாவை முன்பக்கமாய் நகர்த்திக் கொண்டாள். பின்னர் அந்தம்மாவை கண்ணிரும் கம்பலையுமாகப் பார்த்து, “நான் சேரிக்காளிம்மா. படிக்காத முண்டம்மா” என்றாள். இப்படிச் சொன்னதினால் ஒருவேளை வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்று கைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/303&oldid=636775" இலிருந்து மீள்விக்கப்பட்டது