பக்கம்:தாழம்பூ.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 29)

மேடையில் திருமலையப்பன் தோன்றினார். எல்லோரும் அவரை கையெடுத்துக் கும்பிட்டார்கள். அது அவருக்கு விடை கொடுப்பது போலவும், அதே சமயம் அவரை ஒருமித்து வணங்குவது போலவும் இருந்தது. அந்தக்கைகள் நிமிர்ந்தவை நிமிர்ந்தவைகளாக நின்றன. சரோசா, கோழி முட்டையிலிருந்து வெளிப்பட்ட குஞ்க போல் மனதாலும், உடலாலும் வேகப்பட்டாள். தாய் கோழியின் இறக்கைகளுக்குள் அடைக்கலமாய் நிற்கும் குஞ்சு போல் அவளுக்குள் ஒரு தன்னம்பிக்கை; பிறகு அண்ணாத்தே என்ற கழுகைப் பார்த்தபடியே, தாயின் இறக்கைக் கைகளில் நம்பிக்கை வைத்து, வெளியே நகரும் குஞ்சுபோல் ஒரு எண்ணம். படிப்படியாய் பெரியதொரு கோழியாகி அந்தப் பருந்தையே துரத்தப்போவது போன்ற ஒரு ஆளுமை உணர்வின் முளைக்கீற்று, அவள் உள்த்துள் துளிர்த்ததைப் பார்த்தாள்.

வாசனைப் பூக்களை மட்டுமே சூடியும், சூட்டியும் மகிழும் சமூகத்தில், தாழம்பூவான தன்னை எடுத்து அலங்கரித்துக்கொண்ட அத்தனை பேரையும் தோழமையோடு பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/305&oldid=636777" இலிருந்து மீள்விக்கப்பட்டது