பக்கம்:தாழம்பூ.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அவள் எப்படி இருப்பாள்?” “அழகாய் இருப்பாள்.”

‘இந்த வயசில உங்களுக்கு கிழவிகடட அழகாகத்தான் தெரியும், நாங்க அத கேக்கல. அங்க அடையாளம் எப்படி?”

“உருண்டமுகம்.லேசா ஒருதுக்கலான பல்லு:கழுத்துல ஒரு மச்சம்.தாவணி தொடாத பாவாடைபேச்சுரவுடிமாதிரி. ஆனாமுகம் ஜென்டில்”

“கழுத்துப் பக்கம் ஒரு வெட்டு இருக்குமா?

“ஆமா சார், ஆமா.”

காவலர்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் பரிபாஷையில்.

அந்த ஆட்டோ அலைமோதி ஓடியது. எதிரே வந்த ஒரு பாவாடை தாவணி இளம் பெண்ணைப் பார்த்து உறுமியபடி நின்றது. அவள் சிவப்புத் தொப்பிகளைப் பார்த்து ஒதுங்கியபோது, இளங்கோ,"இவள், இல்லை” என்றான். ஆட்டோ, அவளைக்கடந்து, ஒரு மல்டி-பிளாட் கட்டிடம் வழியாக வந்து, அங்கே நின்ற ஒரு பெண்குவியலின் முன்நின்றது.இளங்கோவை இறக்கிவிட்டார்கள். அவன், அவர்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்துவிட்டு, “இல்லை இல்லை” என்று சொன்னபடியே ஆட்டோவில் மீண்டும் ஏறிக் கொண்டான்.

அந்தப் பெண்கள், ஆட்டோவுக்குள் கால் கைகளை விரித்துப் போட்டுக் கொண்டு அடாவடியாகக் கிடந்த கான்ஸ்டபிள்களைப் பார்த்தார்கள். டயர்கள் வெடிக்கும்படியாய், அவர்கள் உடம்புகளும் வெடிப்பது போல் தோன்றின. ஆனால் முன் இருக்கையிலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/31&oldid=636779" இலிருந்து மீள்விக்கப்பட்டது