பக்கம்:தாழம்பூ.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தாழம்பூ

அன்றையப் பிழைப்பு போலீஸ்தனமாகப் போய்விட்டதே என்று அம்பேலாய் உட்கார்ந்திருந்த ஒடிசல் டிரைவரை, கோபங் கோபமாய் பார்த்து, அதே பார்வையை பரிதாபமாய் முடித்தார்கள். இதற்குள் ஆட்டோவின் பின் இருக்கையில் இடம் கிடைக்காமல், டிரைவரின் இருக்கையை பார்த்துப் போன இளங்கோவை கோபமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண் குவியலில் ஒரு இளம் பெண்ணால் தாளமுடியவில்லை. தளதளப்பான உடம்புக்காரியான அவள் தகராறுக் குரலில் கேட்டாள் :

“நாங்க என்ன ஆடா மாடா? நீ பாட்டுக்கு இறங்றே. நீயாட்டுக்கு பார்க்கிற? ஒரு மரியாதிக்குக் கூட இன்னுதுக்காகப் பார்த்தேன்னு சொல்லப்படாதா? இன்னாயா நாயம்? கூலிக்காரிங்கன்னா திருடிங்கனுநெனைப்பா? இந்த அடாவுடிக் காலம் ரொம்ப நாளைக்கு போகாதையா. சாரத்த கழற்றுரது மாதிரி இந்த மட்டுமரியாதி இல்லாத அம்போக்குத்தனனத்த கழற்றுர காலமும் வருமுய்யா.”

இளங்கோ...'பே என்று விழித்த போது, ஒரு போலீஸ்காரர் அவனை உள்ளே பிடித்து இழுத்துப் போட்டுவிட்டு, டிரைவரைப் பார்த்து கையை ஆட்டினார்.

ஆட்டோ பறந்தது.

பிரதானச்சாலை,பிரதானச்சாலையில் இரண்டாவதுதெரு, இரண்டாவது தெருவின் முதலாவது குறுக்குத் தெரு என்பது போன்ற புரியாத பெயர் கொண்ட சாலைகள் வழியாய் ஒடி ஒடி, இறுதியில், சந்தடி மிக்க ஒரு தெருவில் போய் நின்றது, அந்தக் காவலர்கள் இளங்கோவுடன் சேர்ந்து இறங்கினார்கள். பக்கத்தில் ஒரு தேநீர் கடை. அதன் வாசலில் போய் நின்று கொண்டு அங்கே இருந்தவர்களை ஒரே பார்வையாய்ப் பார்த்து மிரட்டுவது போல் கேட்டார்கள் :

“இந்தப் பக்கமா எவளாவது ஒருத்தி கோணி மூட்டையோட போனாளா? சொல்லுங்கப்பா. துரமாரே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/32&oldid=636780" இலிருந்து மீள்விக்கப்பட்டது