பக்கம்:தாழம்பூ.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 19

எல்லோரும் முகங்களை கேளாக் காதுகளோடு, திரும்பிக் கொண்டபோது, ஒரே ஒரு ஒல்லி மனிதர், ‘ஒடக்குப் போன்ற ஜிப்பாக்காரர் எதிர்க் கேள்வி போட்டார் :

“கையில் இரும்புத்தடி வச்சிருந்தவளா? கழுத்துல மச்சமா? முதுகில கோணி மூட்டையா?”

“ஆமா ஆமா...”

“இந்தக் கடையில இஸ்ட்ராங்கா டீ போடச் சொல்லி குடிச்சிட்டு, இப்போதான் அதோ அந்த இரும்புக் கடைக்குள்ள போனாள்.’

காவலர்களில் ஒருவர், கடைக்காரரை அதட்டினார் :

“ஏண்டா டேய், உன் கடையிலேயே டீ குடிச்சிட்டுப் போயிருக்காள்; நீ பேமானி மாதிரி பேசாம இருக்கே. கடைய இழுத்து மூடனுமா?”

அவர்களின் வேகத்தைப் பார்த்து உற்சாகப்பட்ட இளங்கோ, சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு, பிறகு அவர்கள், பேசாமல் நிற்பதைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாய்பேசினான்:

“வாங்க போகலாம் சார். அந்த கடைக்குள் போய் அவளைப் பிடிக்கலாம் சார்.”

“அவசரப்படாத கண்ணு; எங்களுக்குத் தெரியும்.”

அவன் எவ்வளவுக்கெவ்வளவு வேகப்பட்டானோ, போலீஸ்காரர்கள் அவ்வளவுக்கவ்வளவு நிதானப்பட்டார்கள். நேற்று முழுவதும் ஒரு விஜபிக்கு பாரா போனதால், பட்டினி கிடக்கும் வயிறுகளை, ரொட்டிகளாலும், மசால் வடைகளாலும் நிரப்பி விட்டு, இளங்கோவை அர்த்தத்தோடு பார்த்தார்கள். அவன் பைக்குள் இருந்ததை தேனிர் கடைக்காரரின் கைக்குள் வைத்துவிட்டு, அவர்களை அவசர அவசரமாய் பார்த்தபோது, ஒரு போலீஸ்காரர் அந்த இரும்புக் கடையை நோக்கி நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/33&oldid=636781" இலிருந்து மீள்விக்கப்பட்டது