பக்கம்:தாழம்பூ.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 25

ஒரு உதறல்; அவனுக்கே அவன் போக்கு வெட்கமாக இருந்தது.

இதற்குள், சரோசா அவன் இருப்பது தெரியாமல், அந்த வளாகத்திற்குள் நடந்தாள். அந்த கட்டாந்தரைப் பகுதிக்குப்போய் அந்த வெயிலிலும் கம்பளியால் மூடி, அப்படியும் குளிர் தாங்க முடியாமல் ஆடிக்கொண்டிருந்த ஒரு முதியவரின் முன் குத்துக்காலிட்டாள். அவருக்கு பிறப்பினால், எழுபது வயதென்றால், வறுமையோ அல்லது வெறுமையோ மேலும் இருபது ஆண்டுகளைக் கூட்டிவிட்டதைக் காட்டுவது போல் கால்கள் கைகளைப் போலவே இருந்தன. முகத்துக்கும், மார்புக்கும் இடைவெளி தெரியவில்லை. கூனிக்குறுகி கண் இழந்தவர்போல் அங்குமிங்குமாய் கைகளைத் துழாவிய அவர் வாயில், அவள் டியை ஊற்றினாள். பிறகு கையில் இருந்த ஒரு பன்னை’ பிய்த்துப் பிய்த்து தேநீரில் தோய்த்துத் தோய்த்து, ஈரம் சொட்டச் சொட்ட அவரது வாய்க்குள் திணித்தாள். சற்றுத் தொலைவில் ‘தாயப்பாஸ் ஆடிக்கொண்டிருந்த அவளது தோஸ்துகள் - “இன்னாமே யாரோ ஒருத்தன அடிச்சுப் போட்டுட்டு வந்தியாமே, அந்த பொட்டப்பயல் ஒன்னை திருப்பி அடிக்கலியா?” என்றனர்.

வாசல் பக்கம் பட்டும் படாமலும் பார்த்துக் கொண்டு நின்ற இளங்கோவிற்கு, தன்னை ஆண் பயல் என்று நிரூபிக்க வேண்டும் போல் இருந்தது. மீண்டும் ரோஷம் வந்தது. அதற்கு வடிகாலாக, அந்தச் சமயம் பார்த்து அந்தப் பக்கமாய் ஒருபோலீஸ்காரர் வந்தார். அவனுக்கு ஏற்றாற்போல் மணிகேட்டார். அவன்"ஐந்து நாற்பது” என்று சொல்லிவிட்டு, பேச்சை ஆரம்பித்தான். முனுசாமி சொன்னது போல் சற்று ஆணித்தரமாகப் பேசினான்.

‘'சார், இதுக்குள்ளே ஒரு கிரிமினல் இருக்காள். எங்கம்மாவை கொலை செய்ய ‘அட்டம்ட் செய்தவள். எதிர் வீட்டுக்குள் போய் எதையோ திருடியிருக்காள். தட்டிக்கேட்ட என் “மதரின் காலை உடைச்சிருக்காள். ஐ.ஏ.எஸ். அதிகாரிங்க அதிகமாக இருக்கிற எங்க ஏரியாவிலேயே பிரிட்ஜ், டி.வி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/39&oldid=636787" இலிருந்து மீள்விக்கப்பட்டது