பக்கம்:தாழம்பூ.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தாழம்பூ

காணாமல் போகுது. ஒரு ஆறு வயகப் பையன்க்கூட காணல. இவளே இதுக்குக் காரணமுன்னு நினைக்கிறேன். நீங்க இப்போ இவள பிடிச்சு ஸ்டேஷனுக்குக் கொண்டு போகணும்.”

‘நான் ‘பீட்டுக்கு வந்திருக்கேன். எல் அண்ட் ஒ கவனிக்கிறவன்; அதாவது சட்டம்- ஒழுங்கை கவனிக்கிறதுதான் என் வேவ. இது கிரைம்; அதனாலதான் யோசிக்கிறேன்.”

“ஒரு குற்றவாளி கண்ணில் படும்போது பொதுமக்களில் ஒருத்தர்கூட போலீசில் சொல்லாட்டால், அதுவே குற்றமுன்னு சட்டம் சொல்லுது. நீங்க ஒரு போலீஸ்காரர், அப்புறம் உங்க இஷ்டம்.”

அந்த கான்ஸ்டபிள் யோசித்தார். இவன் முகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குரிய களையோ அல்லது திமிரோ இல்லை. ஆனாலும் இவன் அப்படிப்பட்ட ஒரு ஐ.ஏ.எஸ்.ஸின் ஒரு அசட்டுப் பையனாகக்கூட இருக்கலாம். எதுக்கு வம்பு, அவர்? அவன், தோளில் தோழமையோடு கை போட்டு'அவளை காட்டுங்க சார்” என்று கூட்டிப் போனார்.

இருவரும் போய் அந்தப் பிச்சைக்காரப் பகுதியில் நின்றனர். அவள், கையில் இன்னும் இருந்த அந்த மிச்ச மீதிப் பன்னை, பிய்த்துப் பிய்த்து அவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

இளங்கோ, போலீஸ்காரரை அவசரப்படுத்தினான். அவர் தனது விருப்பத்திற்கு விரோதமாகவே அவளை லத்திக் கம்பால் தட்டி ஆணையிட்டார் :

“ஏய். எழுந்திரு, ஒன் பேரென்ன?”

நைனாவின் கையிலிருந்து விடுபட்டு, தலை நிமிர்ந்த சரோசா, அந்தப் புதிய போலீஸ்காரரைப் பார்த்துச் சிரித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/40&oldid=636789" இலிருந்து மீள்விக்கப்பட்டது