பக்கம்:தாழம்பூ.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தாழம்பூ

“நாய்னா, ஜாக்கிரதோ. இந்த குயந்த பையன் இன்னாதான் செய்வான் னு பார்த்துட்டு வர்றேன். யோவ், பொட்டை! நடய்யா”

அந்தப் போலீஸ்காரரும், இந்த இளங்கோவும், சரோசாவும் சேர்ந்தாற்போல், மாதா கோவில் வளாகத்திற்கு வெளியே வந்தார்கள்.

போலீஸ்காரருக்கும் இளங்கோவுக்கும் மத்தியில் வந்த சரோசா, தலைமுடியை விரித்துப்போட்டு, அதுவே கழுத்துக்கு ஒரு ஸ்கிரீன் மாதிரி காட்ட, அங்குமிங்குமாய் பார்த்தாள். ஒரு மேட்டில், இரண்டு பேர் சவலைக் குழந்தை மாதிரி இருந்த கரும்பை துவம்சம் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு அருகே கரும்புச்சாறு குவளை ஒரு மேஜையில் இருந்தது. ஈக்கள் மொய்த்து, அந்தச்சாறு தன்னை ஒரு நோய்த் திரவமாய் பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தது. காக்கிச் சட்டையில் மூன்று கோடுகள்போட்ட ஒரு போலீஸ்காரரும், சிவில் உடையில் சிவப்புக்கோடு சட்டை போட்டிருந்த இன்னொருவரும் கரும்புக்காரரிடம் எதையோ கிசுகிசுத்தார்கள். போலீஸ்காரர், லத்திக் கம்பை ஊன்றிக் கொண்டு கம்பீரமாக நின்றபோது, அந்தக் கரும்பு மனிதர் இரண்டு ஐந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து அவரிடம் நீட்டினார். அவரோ அதை கண்ணால் பார்க்க விரும்பாதது போல் கண்களை மூடிக்கொண்டார். இதற்குள் சிவில் ஆசாமி, அந்த இரண்டு நோட்டுகளையும் பறித்துக்கொண்டு யூனிபாரம் ஆசாமியோடு, ஒரு பேன்சிக் கடையை பார்த்துப் போய்க் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/42&oldid=636791" இலிருந்து மீள்விக்கப்பட்டது