பக்கம்:தாழம்பூ.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 29

சரோசா, தன் பக்கம் நின்ற போலீஸ்காரரைப் பார்த்துக் கேட்டாள்:

“ஏன் சாரே அதோ மாமூல வாங்குறாரே, அவரை ஒன்னால அரஸ்ட் பண்ண முடிமா?”

சரோசாவின் பக்கத்தில் நின்ற போலீஸ்காரர் சற்றுத் தொலைவில் ஒரு சீப்பை எடுத்து தலைவாரியபடியே, ‘சீப்பாக’ நடந்து கொள்ளும் தனது போலீஸ் சகாவையே வெறித்துப் பார்த்தார். அவருக்கு, தனது யூனியாரமே கழன்று அம்மணமாக நிற்பது போல் தோன்றியது. ‘நான் அப்படிப்பட்டவன் இல்லை’ என்று இவளிடம் எப்படிச் சொல்வது? இதுவரை ஒரு டி கடையில்கூட, ஒசிடீ, குடித்ததில்லை என்பதையும், இதனாலேயே பல தண்ணி இல்லாக் காடுகளை ஒசியாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டதையும், பதவி உயர்வு பறிபோனதையும், இவளிடம் எப்படிச் சொல்வது? சரோசா, அவரது முகச்சுளிப்பைப் பார்த்துவிட்டு சமாளித்தாள்.

“அந்த போலீஸ் அண்ணாத்தைய நான் தப்பா சொன்னதா நினைக்காதே சாரே. நாங்கோளும், நீங்கோளும் தோஸ்துங்க. சாரு வேலைக்குப் புதுசோ?”

“இல்ல, இல்ல, உனக்குத்தான் புதுக.” அந்தப் போலீஸ்காரர் பேச்சோடு பேச்சாக, அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, அந்த வழியாய் போன ஒரு ஆட்டோ ரிக்ஷாவை கைதட்டிக் கூப்பிட்டார். அந்த ஆட்டோ டிரைவர் யானை வாயில் பட்ட கரும்பும், போலீசிடம் சிக்கிய ஆட்டோவும் ஒன்று என்பது போல் கண்டுக்காமல் ஆட்டோவை ஒடித்து முறித்து வளைத்தார். உடனே இவர் விசிலடித்தார். பயந்துபோன ஆட்டோக்காரர், பம்மிப்பம்மி வந்து ஆட்டோவை அவர் கால் அருகே, அதன் முனைப்பைக் காட்டி நிறுத்தினார். அந்தப் போலீஸ்காரர் உடனடியாய்க் கேட்டார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/43&oldid=636792" இலிருந்து மீள்விக்கப்பட்டது