பக்கம்:தாழம்பூ.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தாழம்பூ

“இந்தாப்பா, பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல இவங்களை விட்டுட்டு பழையபடியும் இங்கே என்னைக் கொண்டுவந்து விடணும். எவ்வளவு கேக்கிற?”

“சார். சார், கிண்டல் பண்ணாதீங்க சார். நீங்க கைதட்டிக் கூப்பிட்டது நிசமாவே என் காதுல விழல சார்.”

போலீஸ்காரர் ஆட்டோக்காரரை கண்டுக்காமல், இளங்கோவிடம் இப்படிச் சொன்னார்.

“இந்தாங்கமிஸ்டர் என்னோடடுட்டி உங்களை நடக்கவச்சு கூட்டிப்போறதுதான்.உங்களுக்கு இஷ்டம் இருந்தால்பத்து ரூபாய் அவர்கிட்ட கொடுங்க, ஆட்டோவில் போகலாம்.”

இளங்கோ தலையாட்டினான். பைக்குள் இருந்த இருபது ரூபாய் முனுசாமியின் வயிற்றுக்குள் சாராயக் கஞ்சியாகப் போனது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனாலும், அதே ஆட்டோவில் வீட்டுக்குப் போய் பணம் கொடுத்துவிடலாம்.

அந்தப் போலீஸ்காரரும், இளங்கோவும் அக்கம்பக்கம் பார்த்தபோது, சரோசா அந்த ஆட்டோவில் ஏறி ஜம்முன்னு குந்தினாள். இதற்குள் போலீஸ்காரரும் ஆட்டோவுக்குப்பின்புறமாய் நடந்து ஒரு ஒரத்தில் உட்கார்ந்து கொண்டு சரோசாவை ரைட் சைடில் நகரும்படிசைகை செய்துவிட்டு, இளங்கோவைப் பார்த்தார். அவன் சற்று தயங்கிவிட்டு அவர்கள் இருவருக்கும் மத்தியில் வந்து உட்காருவதற்கு யோசிப்பவன்போல் நின்றான். சரோசா அதட்டினாள்:

“யோவ் உன் பேரு இன்னாயா?”

“இளங்கோ.”

‘பேருல மட்டும் கொறச்சல் இல்ல. சீக்கிரமா வந்து குந்தேன்யா. உன்ன மாதிரி நான் என்ன வேலை வெட்டி இல்லாதவளா? நானு ரொம்ப பிஸி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/44&oldid=636793" இலிருந்து மீள்விக்கப்பட்டது