பக்கம்:தாழம்பூ.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 33

“அத ஏன் கேக்கிற சாரே. நாறிப் போச்க நாறி, அதுவும் அந்த பறட்டை தலையன் வந்தாப்பல.”

“விபரமாத்தான் சொல்வேன்.”

சரோசா கதை கதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள். இளங்கோவிற்கு கால்கள் வேர்த்தன. கைகள் நடுங்கின. இதற்குள் அவர்களைக் கூட்டி வந்த போலீஸ்காரர் அவசர அவசரமாய் இடை மறித்துப் பேசினார்:

“சார், இந்தப் பொண்ணு, இவரோட அம்மாவ அடிச்சப் போட்டுட்டு வந்திருக்கா. என்னல்லாமோ திருடியிருக்கிறாள். இவரோடஏரியாவில், ஒரு குழந்தையக்கூடக் காணுமாம்.நிறைய காஸ்ட்லி அயிட்டம், திருட்டுப் போயிருக்காம். இந்தப் பொண்ணு இன்னிக்கி அந்த ஏரியாவில அடாவடியா நடந்ததால, இதை சஸ்பெக்ட்டா கூட்டி வந்திருக்கேன்.”

“நீ லா அண்ட் ஆர்டர் செக்ஷன். இது கிரைம், எல் அண்ட் ஓ-விற்கும், இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?”

“இருக்கு சார், சம்பந்தம் இருக்கு சார். இவரோட ஏரியாவில போகிற திருட்டுக்களை நாம் சீரியஸ்ஸா எடுக்கலைன்னு, இவங்க ஏரியாக்காரங்க, நம்ம போலீஸ் ஸ்டேஷன் முன்னால மறியல் செய்தால் அது லா அண்ட் ஆர்டர்தானே. அப்படியாகாமல் தடுக்கத்தான், இப்பவே ஆக்ஷன் எடுத்தேன்.”

“ஓஹோ. மூக்கைபிடறி வழியாத் தொடுறியா? இந்தாப்பா ராமசாமி, எல் அண்ட் ஒசப்-இன்ஸ்பெக்டர நான் கேட்டுக்கிட்டதாச் சொல்லி கொஞ்சம் கூட்டிக்கிட்டு வா! ஏன் சரோசா, உன்னால கலாட்டா பண்ணாம இருக்க முடியாதா? என்ன இதெல்லாம்?”

“பெரிசாஒண்ணுமில்ல சாரே, இந்தப் பிள்ளாண்டான், நாலு

நாளா ஏன் பின்னாடியே கத்திக்கினு கீறான். நானும் கண்டுக்கல. இவன் ஏரியா பக்கம் கிருஷ்ணாயில் வாங்கப் போனேன். இவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/47&oldid=636796" இலிருந்து மீள்விக்கப்பட்டது