பக்கம்:தாழம்பூ.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 35

யாருய்யா பொறுப்பு? ஏய்யா திமுறா பாக்கே? ஏ.சி. வரட்டும். உன்னமாதிரி ஆளுங்களை கொடுத்துட்டு சட்டம் அமைதி நல்லாயிலலன்னு சட்டம் பேகறாரு சட்டம்.”

திருமலையப்பன், அந்த சப்-இன்ஸ்பெக்டரை அடிக்கப் போவது போல் முறைத்தார். பிறகு அழப்போவது போல் பார்த்தார். கடந்த கால அனுபவங்களையும், குடும்ப நிலையையும் மனதிற்குள் வலுக்கட்டாயமாக நினைத்துக் கொண்டார். கோபம் வந்தால் பத்துவரை எண்ணவேண்டும் என்று ஒருவர் சொல்லிக்கொடுத்தபடி மனதிற்குள் எண்ணினார்.எண்ணியதை இடையில் விட்டார்.பிறகு அவர்களுக்கு விறைப்பாக ஒரு சல்யூட் அடிக்கும் சாக்கில், வலது புறங்கையால் கண்களைக் துடைத்துவிட்டு, வேகப்பட்டவர் போலவும், பாவப்பட்டவர் போலவும் வெளியேறினார்.

கிரைமும், லாவும் மணிக்கணக்கில் பேசப்போவது போல் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்த போது, சரோசா ஒரு பாட்டை முணுமுணுத்தபடி, அந்த அறைச்சுவரில் அப்பிக்கிடந்த துப்பாக்கிகளைப் பார்த்தாள். இளங்கோ, கடிகாரத்தையே மாறிமாறிப் பார்த்தான். இதை தற்செயலாகப் பார்த்த கிரைம் சப்-இன்ஸ்பெக்டர், “நீங்க ரெண்டு பேரும், வெளியில நில்லுங்க, கூடப்பிட்டு அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

வெளியே வந்த இளங்கோவை, சரோசா கண்ணடித்துச் சிரித்தாள். அவன் ஒதுங்கிப்போய் ஒரு மரத்தோடுமரமாக நின்றான்.

அவளோ கீழே கிடந்த ஒரு பொடிக்கல்லை காலால் தட்டித்தட்டி, அது உருண்டு விழும் இடங்களைப் பார்த்து நிதானமாக நடந்தாள். ஒரு சமயம், அதே கல்லை காலால் இடறி அவன் கணுக்காலில் விழச் செய்தாள். இளங்கோ அப்படியும் அசையாது இருப்பதைப் பார்த்துவிட்டு, நாக்கைத் துருத்தி ‘கொன்னுடுவேன்’ என்பது மாதிரி கையை ஓங்கி அழகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/49&oldid=636798" இலிருந்து மீள்விக்கப்பட்டது