பக்கம்:தாழம்பூ.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தாழம்பூ

காட்டினாள். அவன் பதிலழகுகாட்டாமல் கம்மா இருந்ததால் சலி த்துப் போய் அவனைப் பார்த்து சிறிது நெருங்கி நேருக்கு நேராய் கேட்டாள்:"இந்தாப்பா, நானு இதோ அந்த கீரைக்காரம்மாவண்ட பேசிட்டு வாரேன். அதுக்குள்ள போலீஸ் கூப்டா ஒரு நட வந்து சொல்லு, பேஜாருபிடிச்ச பிள்ளாண்டாம்பா. இந்நேரம் ஒரு கிலோ இரும்பு கிடைச்சிருக்கும்.”

இளங்கோ, முகத்தைத் திருப்பிக் கொண்டான். கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்த போது, அது நனைந்துவிட்டது. சரோசாவோ, அலுங்காமல் குலுங்காமல் போய்க்கொண்டிருந்தாள்.

இளங்கோ, அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். அரை மணி நேரம் கழித்து சரோசாவும் ஆற அமர வந்தாள். ஆடாமலே அடங்கிப்போன அவனைப் பார்த்து ‘ரப்பாகச் சிரித்தாள். “இன்னுமா கூப்பிடல” என்று அவனிடமே சர்வசாதாரணமாகக் கேட்டாள். அவனோ, அவளைப் பார்க்காமல் அடிக்கடி கீழே தொங்கிய கையைத் துக்காமலே கடிகாரத்தை குனிந்து பார்த்தான். இப்படிப் பல தலைக் குனிவுகள்!”

இளங்கோ பத்துத் தடவைக்கு மேல் கடிகாரத்தைப் பார்த்துவிட்டான். ஒரு தடவைக்கு பத்து நிமிடம் என்பது போல் நூறு நிமிடம் ஆகிவிட்டது. அவன் பொறுமை இழந்து உள்ளே போகப்போனபோது, இரண்டு சப்-இஸ்ன்பெக்டர்களும் வெளியே வந்தார்கள். இளங்கோ குறுக்கே போய் நின்றான். ஒருவர் அதட்டினார். இன்னொருவர் அந்த அதட்டலுக்கு அபிநயம் பிடிப்பவர் போல் தலையை மேலும்கீழும் ஆட்டினார்.

“என்ன மிஸ்டர் உன்னோட பெரிய தொல்ல? அந்தப் பொண்ணு எப்படிப் பொறுமையா நிக்கறா பாரு, உனக்கு என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/50&oldid=636800" இலிருந்து மீள்விக்கப்பட்டது