பக்கம்:தாழம்பூ.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 39

‘தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளினாளாம், எவளோ ஒரு மூதேவி. அவனைத் தொரத்துனது நீ, அவனும் அப்பன் மாதிரி ரோஷம் கெட்டவனா இருப்பான்னு நீ எப்படி நினைக்கலாம்?”

மிஸ்டர் ரமணன் மட்டும் அங்கே இல்லையானால், பாக்கியம் கப்பையாவை இந்நேரம் உப்பு வைத்து ஊறவைத்திருப்பாள். பிளட் பிரஷர்க்காரர். அப்படியும் பொறுக்க முடியாமல், அவருக்குத் தனியாக டோஸ் கொடுக்க நினைத்து “ஏங்க, கொஞ்சம் இந்தப் பக்கம் வறிங்களா” என்றாள் பணிவாக - மிகமிகப் பணிவாக கப்பையாவா கொக்கா, கண்டுக்கவில்லை. அவருடைய நீண்ட நாள் சிறைபட்ட உணர்வுகள், இப்போது விடுதலை வேகத்தில் வெளிப்படுவதைப் புரிந்து கொண்ட, ரமணன் சமயோசிதமாக சமாளித்தார்.

“சுப்பையா சாருக்கு எப்பவுமே ஜோக்குதான். ஒரு தாயோட மனசஏன் புரிஞ்சுக்கத் தெரியல? எம் மனக அவங்கள விட அதிகமாக சங்கடப்படுது. ஏன்னா, என் வீட்டு இரும்புக் கம்பிய எடுக்கிறத தடுத்தவரு எங்க போயிட்டாருன்னு தெரியலையேன்னு, ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு”

மிஸ்டர் ரமணன், தொடர்ந்தார்.

“நானும் இந்த ஏரியாவில் ஒரு கூர்க்கா போடணுமுன்னு ஒவ்வொரு வீட்டு முன்னாலயம் கரடியா கத்துறேன். யார் கேட்கிறாங்க? இப்பத்தான் இந்த நாடே குட்டிச்சுவராப் போகுது. ஒட்டுப் போடப் போகமாட்டோம். அதே சமயத்தில் அரசியலை அவசுவோம். சினிமாவுல கஷ்டப்படுகிற கேரக்டர்களுக்குக் கண்ணிர் விடுவோம், ஆனால் வாழ்க்கையில கஷ்டப்படுகிறவங்களுக்கு தண்ணிகாட்டுவோம். இதுதான்நம்மோடநேஷனல்கேரெக்டர்.நம்ம நேஷன்ல்கேரெக்டர் இருக்குதே. அப்படி ஏதும் இருக்குதா என்ன?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/53&oldid=636803" இலிருந்து மீள்விக்கப்பட்டது