பக்கம்:தாழம்பூ.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தாழம்பூ

ரமணனின் மகள் பாமா, தந்தையை வெடுக்கெனப் பார்த்தாள். சந்தனத்தையும், குங்குமத்தையும் கலந்தது மாதிரியான நிறம். அடிக்கடி பிடரி முடியை மேலே தூக்கித் துக்கி வைப்பாள் என்பதைத் தவிர குற்றம் சொல்லும்படியாக எதுவும் கிடையாது.

“என்ன டாடி. இப்போபோய லெக்சர் அடிக்கிறீங்க! பாவம் ஆன்டி எப்படித் துடிக்கறாங்க பாருங்க. நீங்களும், அங்கிளும் அங்கே இங்கே போய் தேடுங்க”

“ஒகே. ஒகே. மிஸ்டர் கப்பையா, நீங்க வரப்போரீங்களா, அல்லது இருக்கப் போlங்களா?”

சுப்பையாவும் எழுந்தார். அறைக்குள் போய் ஒரு கோணிப்பை சட்டையை எடுத்துப் போட்டார். அகப்பட்டுக் கொண்டார் என்ற திருப்தியில் அங்கே வந்த மனைவியை விட்டு, லாவகமாக விலகி, வெளியேவந்து, மிஸ்டர்ரமணனோடு சேர்ந்து நின்றுகொண்டு, அவளை இளக்காரமாகப் பார்த்தார். மிஸ்டர் ரமணன் பூட்ஸ்களுக்குள் கால்களை சொருகப் போனபோது -

இளங்கோ உள்ளே வந்தான். பாமாவை பார்க்கும்போதெல்லம், எப்பவும் ஒரு புன்னகை சிந்துவானே, அந்த சிந்தல்கடட இல்லாமல் அங்கிருந்தவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல், அவர்கள் இருந்த வழியாய் நடந்து, எதிர்ப்பக்கமாய் இருந்த தனது அறைக்குள் போனான். வழக்கம் போல் அவன் உள்ளே போனதும் எரியும் பல்ப் எரியவில்லை. அவன் பீஸாகிக் கிடந்தான். பாக்கியம் ஓடோடிப் போய் லைட்டைப் போட்டாள். “கெட்டவுட், கெட்டவுட் அம்மா ஒங்களால இப்பவும் அவமானப் பட்டுட்டு வாறேன்” என்று அவன் கத்துவது கேட்டு கப்பையா மகிழ்ச்சியோடு ஓடினார். மல்லிகா மாத நாவலோடும், பாமா தந்தையோடும் ஓடினார்கள். ரமணன் உபதேசித்தார் :

“மை டியர் யங்மேன், என்ன நடந்தாலும், அதையும் அதை நடத்தினவங்களையும் தீர்த்துக்கட்ட இந்த அங்கிள் இருக்கேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/54&oldid=636804" இலிருந்து மீள்விக்கப்பட்டது