பக்கம்:தாழம்பூ.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 43

ரமணனுக்கு ஒரு திருப்தி. எந்த வீட்டுக்கு எத்தனை தடவை போனாலும், அந்த வீட்டில் அத்தனை தடவையும் தனது மகன் அமெரிக்காவில் இருப்பதைச் சொல்லாவிட்டால் அவருக்கப் பேச்சே வராது. ஆனால், பாமா அப்பாவை அதட்டினாள் :

“டாடி, நம்ம பிரதரோட அமெரிக்கப்பெருமையை நாளைக்கு வச்சுக்கலாம். போலீஸ்காரங்கள் இளங்கோவை கைது செய்யறதுக்கு முன்னால டு சம்திங். பிளிஸ். ஏதோ ஒரு டெப்டி கமிஷனர் உங்களோட கிளாஸ்மெட்டுன்னு அலட்டிக்குவீங்களே, அது உண்மையா பொய்யான்னு இப்பவே தெரியணும். இளங்கோவுக்கு மட்டும் நியாயம் கிடைக்காட்டி, நானே போலீஸ் ஸ்டேஷன் முன்னால போய் மறியல் செய்வேன். இதையும் உங்க பிரெண்ட்கிட்ட டெலிபோன்ல சொல்லுங்க டாடி’

மிஸ்டர். ரமணன்,கம்பீரமாக எழுந்தார்.டெலிபோன் இருந்த அறைக்குள், கப்பையா அவரை வழிநடத்தினார். டெலிபோன் எண்களைச் சுழற்றினார். இதற்குள் பாமாவின் கண்ணசைவில் இளங்கோவும் அவளோடு அந்த அறைக்குள் வந்தான். லைன் கிடைத்ததும் ரமணன் வெளுத்துக்கட்டினார்.

“நீங்க யாரு?டெப்டி கமிஷனரோட பி.ஏ.வா? அவரு இப்ப ரொம்ப பிஸியா? என்னோட கிளாஸ்மெட்டுய்யா, பிரச்சினையும் பெருகய்யா. இந்த நாடே குட்டிச்கவராகப் போனதுக்கு உன்னமாதிரி பி.ஏ.க்கள் தான்யா காரணம். என்ன? உன் கிட்ட சொல்லுணுமா? சொல்றேன், சொல்றேன். என்னோட பக்கத்து வீட்டுப்பையன்-குட்பாய்-ஒருபொம்பள ரவுடி அவன அடிச்சது மட்டுமில்லாம, இவன் என்னமோ அந்த அழகிய கற்பழிக்கப் போனதா போலீஸ்ல சொல்றாளம். அந்தமானங்கெட்டபோலீசும் அவள் சொல்றத நம்புதாம். வாட் எ ஷேம் என்னய்யா சொல்றே? அந்தப் பையனை போலீஸ்ல சரண்டராகச் சொல்லணுமா? நீ யாருய்யா அத சொல்றதுக்கு? டெப்டி கமிஷனர் கிட்ட வைன

கொடுய்யா. ஹலோ. ஹலோ..!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/57&oldid=636807" இலிருந்து மீள்விக்கப்பட்டது