பக்கம்:தாழம்பூ.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தாழம்பூ

ரமணன், டெலிபோனில் கிலோ கணக்கில் ஹலோ போட்டார். இறுதியில் போனை உடைப்பது போல் வைத்து விட்டு, “லைனை கட் பண்ணிட்டான். இந்த நாடே இப்போ, பி.ஏ.க்களாலதான் ஆளப்படுது. போலீகம் இதுக்கு விதி விலக்கு இல்ல” என்று சொல்லிவிட்டு, பரக்கப் பரக்கப் பார்த்தார். பாமா, ஒரு யோசனை சொன்னாள் :

“ஏன் டாடி... பேசாமல் டெப்டி கமிஷனர் வீட்டுக்கே போயிட்டு வந்திடுங்களேன்.”

“போகலாம்தான். அங்கேயும், ஏ.கே-47 துப்பாக்கியோட இருக்கிற ஒருத்தன் தடுப்பானே. டோன்ட் ஒர்ளி. நாளைக்குக் காத்தால எட்டு மணிக்குள்ள அவரை பிடிச்சுடறேன். அப்போ பி.ஏ.-வும் இருக்க மாட்டான்; எம்.ஏ.வும் இருக்க மாட்டான்; கவலைப்படாதே இளங்கோ.”

“இவ்வளவு நடந்தும் எப்படி சார், கவலைப்படாம இருக்க முடியும்?”

“ரமணன் ஸார். நீங்கதான் என் பிள்ளைய மீட்டுத்தரணும். இந்த மனுசனை நம்பிப் பிரயோசனம் இல்லை.”

“கவலைப்படாதீங்க பாக்கியம்மா. இப்படி குழந்தை மாதிரியா அழுவறது? பாருங்க உங்க டாட்டர் மல்லியை... அவளை மாதிரி கம்பீரமாக இருக்கணும்.”

“ஆமாம் ஆன்ட்டி, டாடி ஏதாவது செய்யாமல் அவர நான் விடப்போறதுல்ல. ஒருவேளை நான் மட்டும் வீட்ல. இருந்து, இந்தப் பொறுக்கிப் பொண்ணை நான் தடுத்திருந்தால் என்னை கொலை பண்ணிட்டு இந்த ஆறு பவுன் செயினை கழுத்தோட சேர்த்து அறுத்துட்டுப் போயிருப்பாளே. எதுக்குச் சொல்றேன்னா, இளங்கோவோட பிரச்சினை, என்னோட பிரச்சினை. அவரோட தியாகம் வீண்போகாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாழம்பூ.pdf/58&oldid=636808" இலிருந்து மீள்விக்கப்பட்டது